செப்டம்பர் 19, 2007 - இந்திய பங்குச்சந்தையில் மற்றொரு "அதிரும்" நாள்!
நேற்று பங்குச்சந்தை ஆரம்பித்த சில நேரங்களிலேயே 16,000 புள்ளிகளை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த புதிய சாதனை படைக்க 53 வேலை நாட்கள் ஆகியுள்ளது. நிஃப்டியும் 4,732 புள்ளிகளுடன் புதிய எல்லையை எட்டியுள்ளது.
ஒரே நாளில் 654 புள்ளிகளுடன் (15669.12 --- > 16322.75 [4.17%] ) காளை பாய்ச்சலில் தாண்டியது மற்றொரு சாதனை .
286 நிறுவனங்களின் பங்குகள் '52-week high' சென்றுள்ளது. அதில், SBI, Tata Steel, HDFC மற்றும் Reliance போன்ற பெரும் முதலைகளும் உண்டு.
சில நிறுவனங்கள் 400 சதவீதம் இலாபம் அடைந்துள்ளது. அதில் Modern Dairies 1035%, Crystal Software Solutions 841%, Neha Internationsla 679%, Reliance Energy 81% மற்றும் SBI 41% ம் அடங்கும்.
வழக்கம்போல், 'பொருளாதார வல்லுனர்கள்' இந்திய பங்குச்சந்தை மேலும் பல புதிய சாதனைகள் (17K !?) படைக்கும் என்று நம்பிக்கை கொடுத்தாலும் சிலரின் எச்சரிக்கை கவனத்தில் கொள்ளகூடியது. எப்பொழுதும் அதிரடியாக மேலே போனால் ஆபத்துதானே!
அதாவது, சாதனைகளில் இரண்டு வகை! ஒன்று... நம்முடைய 'பலத்தில்' நாம் முன்னேறுவது....... இரண்டாவது, அடுத்தவர்களின் 'பலவீனத்தால்' நாம் முன்னேறுவது.......
செப்டம்பர் 18, 2007 அன்று அமெரிக்க ரிசர்வ் வங்கி நான்கு ஆண்டுகளுக்கு பின் வட்டி விகிதத்தை 4.75%ஆக குறைத்துள்ளது. நம்முடைய பங்குச்சந்தையின் காளை பாய்ச்சலுக்கு இதுவும் ஒரு காரணம்.
மற்றும் இப்பொழுதுள்ள அரசியல் (அடுத்த தேர்தலுக்கான ?! )சூழ்நிலையில், பங்குச்சந்தையில் இதே காளை பாய்ச்சல் நீடிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால், அடுத்த இரண்டு நாட்கள் பங்குச்சந்தையை கூர்ந்து கவனிக்கவேண்டியது மிகவும் அவசியம்.
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
3 comments:
654 புள்ளி சென்செக்ஸ் உயர்வு அதுவும் ஒரே நாளில் என்பது சந்தைக்கும் புதிதான ஒன்று.
எச்சரிக்கையாக இருக்க வேண்டுமே தவிர பயந்து ஒதுங்கிவிட கூடாது.
சென்செக்ஸ் 8000 புள்ளிகளாக இருந்தபோது அப்போதய new peak முதலீடு செய்வதை நிறுத்திவிட்டதாக ஒருவர் வருத்தப்படுவதையும்
இன்னொரு கார்டூனில் சந்தை மேலே மேலே போவதால் மனைவியின் நகை முதல்கொண்டு அடகு வைத்து ஒருவர் ஷேர் மார்கெட்டில் இறங்கியதாகவும்
கார்டூனாக பிசினஸ் லைன் பத்திரிகையில் வந்ததை மட்டும் நினைவு கூர்கிறேன்.
மேலும் கீழுமாய் ஏறி இறங்குவதுதான் சந்தையின் இயல்பு.
உச்சங்கள் புதிய உச்சங்களால் தோற்கடிக்கப்படும்.
சந்தை கீழே விழும் என நம்பினால் லாபத்தில் ஒரு பகுதியை வெளியே எடுங்கள் (book profits often) முழுவதுமாக வெளியேறிவிடாதீர்கள் (dont exit).
ஆமாம், சிவா! (எப்பொழுதுமே பங்கு சந்தை முதலீட்டீல்)எச்சரிக்கையாக இருத்தல் நல்லது.
எப்பொழுது 'வெளியே' வருவது என்பதில்தான் 'வெற்றி' இருக்கிறது.
Thentral sir
In which MF (name of the fund)
SIP is the best<
give details..Now my savings are
in gpf(being govt babu) and
RD/PO
from aswini
Post a Comment