பங்குச்சந்தை 16,000 புள்ளிகளை தாண்டிய வேகத்தில், 18,000 புள்ளிகளை நோக்கி காளை பாய்ச்சலாக இருக்க, ஒரு பக்கம் நல்லதாக பட்டாலும், சிறிய மற்றும் புதிய முதலீட்டார்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம் என்றே 'பச்சி' சொல்கிறது. முடிந்தவரை இலாபமுள்ள பங்குகளை விற்று காசு பார்ப்பது நல்லதாகவே படுகிறது. விலை குறையும் போது மீண்டும் அதே (நல்ல) பங்குகளை வாங்குவது நலம்.
நேற்று நிதி அமைச்சர் சிதம்பரம் நிருபர்களிடம் பேசுகையில்,
"பங்குச்சந்தை 18 ஆயிரத்தை நோக்கி நெருங்கி கொண்டு இருக்கிறது.இந்த சமயத்தில் சிறு முதலீட்டாளர்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். அவர்கள் இந்த நிலையில் பங்குச்சந்தைக்குள் நுழைவது சரியாக இருக்காது. அவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்ய அதீத ஆர்வம் காட்டுகின்றன. இதை வரவேற்காமல் இருக்க முடியாது."
போன மாதம் மட்டும் (செப்டம்பர் '07) வெளிநாட்டு நிறுவனங்கள் [FII] 19,000 கோடி ரூபாய் (அதாவது, 190 பில்லியன் ரூபாய்) இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்துள்ளார்கள்.இந்த காளை பாய்ச்சலுக்கு இதுவும் ஒரு காரணம்.
ஆனா இந்த மாதிரி அதிரடியா மேல போன, ரொம்ப இலாபம் வரும்னு 'பேராசை' படாம நல்ல பங்குகளை கணிசமான இலாபத்தில் விற்று விடுதல் நல்லது.
சில பங்குதரகர்கள் 18000 புள்ளிகளை இந்த மாதத்திற்குள் தொட்டுவிடும் எனவும், சிலர் மீண்டும் 16000 புள்ளிகள் வந்தாலும் ஆச்சரியமில்லை என்றும் 'கணிக்கிறார்கள்'.
இனி வரும் நாட்களில், சந்தையை பொறுத்தவரையில் மிகவும் ஆவலுடனும், எச்சரிக்கையுடனும் கவனித்து வருதல் நலம். அப்பொழுதுதான் ஒரு சரிவு வரும்பொழுது எந்த பங்குகளை மீண்டும் வாங்கலாம்/விற்கலாம் என்ற "தெளிவு" பிறக்கும்!!
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
9 comments:
FLOWS:
Institutions Flows [Since Sep 26]
FIIs (Cash): + $ 3.52 bn
FIIs (FNO): - $ 62.5 mn
FIIs (Net): + $ 3.48 bn
DIIS: - $ 660 m
Sectoral Indices 16-17K (%) 17-18K (%)
BSE IT -0.18 +7.75
BSE Capital Goods +5.1 +6.6
BSE Oil & Gas +9.9 +3.6
BSE Auto +3.5 +2.1
BSE Bankex +5.6 -0.24
BSE FMCG +0.79 -1.7
BSE Healthcare +0.11 +0.51
BSE Metal +5.15 +5.8
CONTRIBUTION
Sensex Movers (Contribution from 17K-18K)
Reliance: 185 pts
Infosys: 153 pts
Reliance Energy 104 pts
L&T 103 pts
Reliance Comm 94 pts
Bharti Airtel 70 pts
Total 708
17-18K:
* Top 6 stocks have contributed over 70% in 1000 run-up
* IT sector has come back after underperforming from 14-17K
* Infosys has gained nearly 12% from 17-18K
* Midcap and Small-cap Indices did not participate in the rally
TECH STOCKS [17-18K Returns]
Infosys +12%
TCS +5%
Wipro +7%
Satyam +8.3%
Sensex: Road to 18 K
9-10K: 49 days
10-11K: 30 days
11-12K: 20 days
12-13K: 136 days
13-14K: 27 days
14-15K: 144 days
15-16k: 53 days
16k-17k: 6 days
17k-18k: 8 days
Sensex Chronology
18,000- October 9, 2007
17,000 - Sep 26, 2007
16, 000 - Sep 19, 2007
15,000 - July 6, 07: 15000
14,000 - Dec 5, 2006
13,000 - Oct 30, 2006
12,000 - Apr 20, 2006
11,000 - Mar 21, 2006
10,000 - Feb 6, 2006
9,000 - Nov 28, 2005
8,000 - Sep 8, 2005
7,000 - June 20t, 2005
6,000 - Feb 11, 2000
5,000 - Oct 8, 1999
Thanks: Moneycontrol.com
இது ஆதிரும் பங்குச்சந்தை என செப்டம்பர் 19ம் தேதி எழுதிய பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம்
//
654 புள்ளி சென்செக்ஸ் உயர்வு அதுவும் ஒரே நாளில் என்பது சந்தைக்கும் புதிதான ஒன்று.
எச்சரிக்கையாக இருக்க வேண்டுமே தவிர பயந்து ஒதுங்கிவிட கூடாது.
சென்செக்ஸ் 8000 புள்ளிகளாக இருந்தபோது அப்போதய new peak முதலீடு செய்வதை நிறுத்திவிட்டதாக ஒருவர் வருத்தப்படுவதையும்
இன்னொரு கார்டூனில் சந்தை மேலே மேலே போவதால் மனைவியின் நகை முதல்கொண்டு அடகு வைத்து ஒருவர் ஷேர் மார்கெட்டில் இறங்கியதாகவும்
கார்டூனாக பிசினஸ் லைன் பத்திரிகையில் வந்ததை மட்டும் நினைவு கூர்கிறேன்.
மேலும் கீழுமாய் ஏறி இறங்குவதுதான் சந்தையின் இயல்பு.
உச்சங்கள் புதிய உச்சங்களால் தோற்கடிக்கப்படும்.
சந்தை கீழே விழும் என நம்பினால் லாபத்தில் ஒரு பகுதியை வெளியே எடுங்கள் (book profits often) முழுவதுமாக வெளியேறிவிடாதீர்கள் (dont exit).
//
இதை இங்கே ஒரு ரிப்ப்பீட் சொல்லிக்கிறேன்.
இப்போது சென்செக்ஸ் 18280 இருந்த போதும் நல்ல 'Quality Stocks' சரியான் விலையில் இருக்கவே செய்கின்றன.
டிரேடராக இல்லாமல் இன்வெஸ்டராக வெற்றி பெற வாழ்த்துக்கள்
தென்றல் ரொம்ப பிசியா?
பங்குசந்தை 19 ஆயிரத்தை நோக்கி
சீக்கிரம் பதிவு போடுங்கப்பு
நீங்க போடறதுக்குள்ள தாண்டீடும்னு நினைக்கிறேன்
:-))
வாங்க, மங்களூர் சிவா!
//பங்குசந்தை 19 ஆயிரத்தை நோக்கி
சீக்கிரம் பதிவு போடுங்கப்பு//
;)
//நீங்க போடறதுக்குள்ள தாண்டீடும்னு நினைக்கிறேன்//
:) அப்படிகிறீங்க... நல்லதுதான்...
பாருங்க.. CPM - காங்கிரஸ் அணு ஒப்பத்தம்பத்தி மீண்டும் பேச்சுவார்த்தைனு தலைப்பு செய்தி வந்தவுடன் ... "பங்குசந்தையும்"
அதிருது...
'ஆதரவு வாபஸ்'னு ஒரு வதந்தி.. வந்தா நம்ம பங்குசந்தை எந்தளவுக்கு கீழபோகும்னு நினைச்சா 'கொஞ்சம்' கண்ணகட்டதான் செய்யுது...
அடிபெருசாவே இருக்கும்?!
//
'ஆதரவு வாபஸ்'னு ஒரு வதந்தி.. வந்தா நம்ம பங்குசந்தை எந்தளவுக்கு கீழபோகும்னு நினைச்சா 'கொஞ்சம்' கண்ணகட்டதான் செய்யுது...
அடிபெருசாவே இருக்கும்?!
//
I DONT THINK SO. LET IT BE.
FOR EVERYONE WHETHER THEY ARE NEWCOMERS ARE EXPERTS ONLY ADVISE IS
டிரேடராக இல்லாமல் இன்வெஸ்டராக வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சிவா,
முதலீட்டாளர்களாக இருக்க வேண்டும் என்பது சரிதான்..
அதுதான் நீண்ட நாள் நிலைத்துநின்று ஆடுவதற்கான வழி.
ஆனால், நம்முடைய பங்குச்சந்தை மிகுந்த ஏற்றம், இறக்கம் நிறைந்தது என்பது என் எண்ணம்!
தென்றல்,
//போன மாதம் மட்டும் (செப்டம்பர் '07) வெளிநாட்டு நிறுவனங்கள் [FII] 19,000 கோடி ரூபாய் (அதாவது, 190 பில்லியன் ரூபாய்) இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்துள்ளார்கள்.இந்த காளை பாய்ச்சலுக்கு இதுவும் ஒரு காரணம்.//
எனக்கு என்னமோ இது மீண்டும் ஏற்படும் ஒரு வீக்கம் ஆகவே தென்படுகிறது. முன்னர் போல இதுவும் ஹெட்ஜ் பண்ட்களால் ஏற்பட்ட பலூன் நிலை என நினைக்கிறேன்.
அன்னிய முதலீடுகள் மீது செபி ஒரு கண் வைக்கும் , காது வைக்கும் என்று முந்தைய சரிவின் போது சொன்னார்கள் அப்படி என்ன செய்துள்ளார்கள்!
அப்புறம் சரியும் போது இது ஒரு கரெக்ஷன் என டெக்னிகலாக சொல்லி ஜல்லி அடிப்பார்கள் , பொருளாதாரப்புலிகள்.
இந்திய பங்கு சந்தையின் காளைப்பாய்ச்சலுக்கும் , டாலர் சரிவுக்கும் ஒரு தொடர்புள்ளது தானே!
//அன்னிய முதலீடுகள் மீது செபி ஒரு கண் வைக்கும் , காது வைக்கும் என்று முந்தைய சரிவின் போது சொன்னார்கள் அப்படி என்ன செய்துள்ளார்கள்!//
வவ்வால், இப்பொழுதும் இதேயேதான் சொல்லிகொண்டு இருக்கிறார்கள்.;)
//அப்புறம் சரியும் போது இது ஒரு கரெக்ஷன் என டெக்னிகலாக சொல்லி ஜல்லி அடிப்பார்கள் , பொருளாதாரப்புலிகள்.
இந்திய பங்கு சந்தையின் காளைப்பாய்ச்சலுக்கும் , டாலர் சரிவுக்கும் ஒரு தொடர்புள்ளது தானே!
//
என்னுடைய எண்ணமும் அதுவே!
ஆனால்,http://panguvaniham.wordpress.com ல் படித்தது...
" நமது சந்தையின் காளைப் பாய்ச்சலுக்கும் சர்வதேச சந்தைகளுக்கும் சம்பந்தமில்லாதிருப்பதையும் கவனியுங்கள். அமெரிக்க சந்தைகள் பக்கவாட்டிலும், பிற சர்வதேச சந்தைகள் பெரிதாய் சலனமில்லாதிருப்பதும் குறிப்பிடத் தக்கது."
Post a Comment