கேள்வி: ‘மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவேண்டும் என்றால், பான் எண் கேட்கப்படுகிறது. ஏற்கெனவே முதலீடு செய்தவர்களும் பான் எண் கார்டு வாங்க வேண்டி வருமா?'
பதில்: ‘‘ஏற்கெனவே முதலீடு செய்துள்ளவர்களிடம் பான் விவரத்தைத் தெரிவிக்கும்படி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கேட்டு வருகின்றன. யூனிட்களை விற்றுவிட்டு வெளியேறும்போது பான் எண்ணைக் கொடுக்கவேண்டி வரும். எனவே, அதற்கு இப்போதே தயாராகிவிடுவது நல்லது. பான் கார்டு இல்லாமல் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்க விண்ணப்பித்திருந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ஒரு தகவல். இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சிறு முதலீட்டாளர்கள் அதுவும், எஸ்.ஐ.பி. முறையில் விண்ணப்பம் செய்திருந்தவர்கள்தான்."
கேள்வி: ‘‘பான் கார்டு எண்ணைக் குறிப்பிட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். ஆனால், வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யவில்லை. ஏதாவது சிக்கல் வருமா?"
பதில்: ‘‘உங்கள் வருமானம், வருமான வரி அடிப்படை வரம்பைத் தாண்டும்போதுதான் வருமான வரி கணக்கு விவரத்தைத் தாக்கல் செய்யவேண்டும். பான் கார்டு எண்ணை முதலீடுக்காக குறிப்பிடுவதற்கும் அதற்கும் தொடர்பு இல்லை. வருமான வரி கட்டும்பட்சத்தில் பான் கார்டு வாங்குவது அவசியம்."
கேள்வி: ‘‘மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு கேப்பிட்டல் கெயின் டேக்ஸ் (Capital Gain Tax) எந்தத் தொகைக்கு கட்டவேண்டும்?"
பதில்: ‘‘ஒரு ஆண்டுக்குள் ஒரு முதலீட்டை வாங்கி, விற்று அதில் லாபம் பார்த்தால் ஷார்ட் டேர்ம் (குறுகிய கால) கேப்பிட்டல் கெயின் டேக்ஸ் செலுத்த வேண்டும். அதுவே, ஒரு வருடத்துக்கு மேல் வைத்திருந்து விற்கும்போது லாங் டேர்ம் (நீண்ட கால) கேப்பிடல் கெயின் டேக்ஸ் எனப்படுகிறது. இதற்கு வரி செலுத்தத் தேவையில்லை"
கேள்வி: ‘‘சென்செக்ஸ் ஏற்றம் & இறக்கம், இதில் எந்தச் சமயத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது?"
பதில்: ‘‘மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய எஸ்.ஐ.பி. முறைதான் சிறந்தது. சந்தை ஏறி-&இறங்கினாலும் விலை மாற்றத்தை அது சமன் செய்கிறது. சந்தையின் போக்கை வைத்து முதலீடு செய் யும் கவலையை ஃபண்ட் மேனேஜரிடம் விட்டு விட்டு நிம்மதியாக இருங்கள்"
கேள்வி: ‘‘அதிக என்.ஏ.வி&யை விட குறைவான என்.ஏ.வி. உள்ள திட்டங்களையே பலரும் தேடுகின்றனர். அது தான் சரியான முடிவா?"
பதில்: ‘‘இந்த இரண்டுமே ஒன்றுதான். மதிப்பில் மட்டுமே வித்தியாசப்படுகிறது. திட்டத்தின் வளர்ச்சி விகிதம்தான் கணக்கிடப்பட வேண்டிய விஷயம். பத்து ரூபாய் திட் டம் பதினோரு ரூபாய் ஆவதும் நூறு ரூபாய் திட்டம் 110 ரூபாய் ஆவதும் ஒரே அளவான வளர்ச்சி விகிதம் தான். ஆனால், 110 ரூபாய் என்பது அதிக வளர்ச்சியாக வும், 11 ரூபாய் குறைந்த வளர்ச்சியாகவும் தோன்றும். ஆனால், இந்த இரண்டின் வளர்ச்சி விகிதமும் 10% என்ற ஒரே அளவுதான். எனவே, வளர்ச்சி விகிதத்தைத் தான் அளவுகோலாக வைத்துக்கொள்ள வேண்டும். விலையை அல்ல"
நன்றி: நாணய விகடன்!
இந்தியா ஜி.டி.பி வளர்ச்சி புள்ளிவிபரத்தில் குளறுபடி - அம்பலப்படுத்தும்
அரவிந்த் சுப்பிரமணியன்
-
இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரங்கள் தவறு என்று நிறுவும்
ஆய்வுக் கட்டுர...
5 years ago
10 comments:
பொதுவாக எழக்கூடிய பொதுஜன கேள்விகளை "எடுத்து" போட்டதற்கு மிக்க நன்றி.
Dear friend,
Is this "Captial Gain Tax" relief after one year is applicable only for mutual fund on equity? or it is applicable for any kind of mutual fund?
Thayavu seithu viLakkavum.
Nandri.
வாங்க அண்ணாச்சி!
பிரபா,
எல்லாவகை மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச்சந்தை முதலீட்டுக்கும் இது பொருந்தும்.
@prabaha , தென்றல்
//
Is this "Captial Gain Tax" relief after one year is applicable only for mutual fund on equity? or it is applicable for any kind of mutual fund?
//
//
எல்லாவகை மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச்சந்தை முதலீட்டுக்கும் இது பொருந்தும்.
//
ம்யூச்சுவல் ஃபண்ட் பொருத்தவரை Equity Fund& Balanced Fund க்கு மட்டுமே பொருந்தும்.
MIP, MONEY MARKET, LIQUID FUNDKகளுக்கு பொருந்தாது.
@ Thandral,
thangal bathilukku nandri...
@ mangalore siva,
Thelivu paduthiymaikku mikka nandri... i'm new to this Mutual funds and trying to learn and invest on it.
I see three kinds of mutual fund in the citibank site... Equity, Bond, and Liquid.
Neengal Balanced Fund endru kurippittathu "Bond"-a?
allathu athu veru ithu vera?
thyavau seithu vilakkavum.
நன்றி, சிவா!
பிரபா, அது... balanced fundதான்!
மேலும் சில விவரங்கள் இங்கே...
http://nanayam2007.blogspot.com/2007/05/6.html
http://nanayam2007.blogspot.com/2007/05/4.html
@தென்றல்
http://nanayam2007.blogspot.com/2007/05/6.html
http://nanayam2007.blogspot.com/2007/05/4.html
இதுல இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாமே!
@Prabha
Equity Fund - Equity Exposure will be 90 - 100%
Balanced Fund - Equity Exposure will be 60% Debt 40%
MIP - Equity Exposure 15 %- 20% Debt 80% - 85%
Liquid Funds - Equity Exposure 0% Debt 100%
சந்தையின் போக்கை பொறுத்து Equity Exposure / Cash Level ஐ ஃபண்ட் மானேஜர் குறைக்கவோ கூட்டவோ செய்வார்.
(வழக்கம் போல்) நன்றி, சிவா!
/இதுல இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாமே!/
நீங்க சொல்லுங்க, சிவா..
கேட்க தயாரா இருக்கோம்!!
/இதுல இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாமே!/
இதை சொன்னதுக்கு காரணம் அந்த நீங்க குடுத்த லிங்ல Examples தான் இருந்தது. Equity Exposure percentage இல்ல.
Post a Comment