நண்பர் ஒருவர்... எனக்கு பங்குச்சந்தை என்றால் என்னனு தெரிவதற்கு முன்னாலே பங்குச்சந்தையிலே முதலீடு செய்தவர். வருடம் 2002. அப்பொழுது பங்குச்சந்தை 3200 - 3500 புள்ளிகள் இருந்திருக்கும். "அதிகமா ஆசைபடாமல்", 50 சதவீதம் இலாபம் போதும் என்ற நோக்கில் ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்தார். வங்கி/தபால்துறை சேமிப்பை விட நல்ல இலாபம் என்பது அவருடைய கணக்கு. இப்பொழுது (5 வருடத்திற்கு பிறகு) ஒன்றரை இலட்சம் அவருடைய கணக்கில் இருக்கிறது. இப்படி நம்மில் பலபேருடைய மனநிலை...
ஆனால் இப்பொழுது பங்குச்சந்தையோ 18,000 புள்ளிகளை தாண்டிவிட்டது.
பங்குச்சந்தையின் வளர்ச்சியோ....
உயர்வு (அ) இலாபம் = (18000 - 3500 ) / 3500 = 4.14 அதாவது... 414 %
இந்த 5 வருடத்தில் பங்குச்சந்தை 414 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதே அளவில் இவருடைய முதலீட்டின் வளர்ச்சி இருந்திருந்தால்
இலாபம் = (414 - 50) / 50 = 7.28 அதாவது 728%
அதாவது ஒரு இலட்சம் ரூபாய் 728 % சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். கிட்டதட்ட ஏழு இலட்ச ரூபாய் அவரிடம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவருடைய கணக்கின்படி அப்படி இல்லையே? ஏன்?
இப்பொழுது இன்னொரு கணக்கு....
அந்த ஒரு இலட்சத்தை நண்பர் வரி-விலக்கு பாண்டுகளில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். மூன்று வருடம் பணத்தை எடுத்திருக்க முடியாது. அதிகபட்சம் 6 % வட்டி கிடைத்திருக்கும். மூன்று வருடத்தில் 18 %. வரி (30%) கட்டதேவையில்லை . அதனால், சேமிப்பு = 30 + 18 = 48%.
அதாவது மூன்று வருடத்தில் 48%. வருடத்திற்கு 16% (48/3) இலாபம்.
ஆனால் பங்குச்சந்தையில் 5 வருடத்தில் அவருக்கு கிடைத்ததோ 50% . வருடத்திற்கு 10% (50/5) தான்.
நாம் முதலீடு செய்த பணம் நமக்கு வரும் என்று உத்திரவாதமில்லாத பங்குச்சந்தையைவிட எந்த ரிஸ்க்கும் இல்லாத பாண்டுகளில் அதே அளவு இலாபம் கிடைக்கிறது. எப்படி?
எங்கேயோ தப்பு இருக்கிறதா? பங்குச்சந்தையை பற்றி நமது புரிதலிலா அல்லது அதன் மதிப்பீட்டிலா?
(இன்னும் பேசலாம்)
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
5 comments:
Returns from the market depends on which stock this person invested in. The rise in Sensex indicates the rise in the prices of the index components (scrips which are also reviewed frequently). If your friend had invested in line with the sensex components in similar weightage, he/she would have seen similar returns.
Visit our website at www.balubhai.com. We are looking at translating our reports into tamil. Any inputs or references is welcome. Cheers
Raghav
//
"அதிகமா ஆசைபடாமல்", 50 சதவீதம் இலாபம் போதும் என்ற நோக்கில் ஒரு இலட்சம் ரூபாய் முதலீடு செய்தார். வங்கி/தபால்துறை சேமிப்பை விட நல்ல இலாபம் என்பது அவருடைய கணக்கு. இப்பொழுது (5 வருடத்திற்கு பிறகு) ஒன்றரை இலட்சம் அவருடைய கணக்கில் இருக்கிறது
//
2002 ல் முதலீடு செய்தா 1 லட்சம் ஐந்து வருடங்களுக்கு பிறகு வெறும் 1.5 லட்சமா??
எது அந்த மல்டி பேகர் ஸ்டாக்ஸ்?
:-)))))
//
எங்கேயோ தப்பு இருக்கிறதா? பங்குச்சந்தையை பற்றி நமது புரிதலிலா அல்லது அதன் மதிப்பீட்டிலா?
//
இதுக்கு பதில் சொல்லித்தான் தெரியனுமா??
கடந்த காலங்களைப் போலவே சென்செக்ஸ் வரும் காலங்களில் பறக்குமா என்பதற்கு உறுதியில்லை.
year on year 15% ரிட்டர்ன் கிடைத்தாலே மிக சிறந்த ரிட்டர்ன்தான்.
I agree with Raghav. Your friend needed to realign his portfolio.
Raghav, I checked your balubhai.com requires monthly subscription of Rs.4000. Plese give some TRIAL or guest access.
Hi Shiva.. You can get free reports in the discussion forum of BaluBhai. Its at http://groups.google.com/group/balubhaiwrites
Note: The free reports dont give stock by stock recommendations. You will need to subscribe to the reports on the site for that. Archive reports are available for free though.
Post a Comment