முதல் பகுதி
அதாவது பங்குச்சந்தை 4.14 மடங்கு வளர்ச்சியில், நண்பரின் முதலீட்டின் வளர்ச்சியோ 0.5 மடங்கு. அவருடைய மதிப்பீட்டின்படி நல்ல வளர்ச்சி(!?). ஆனால் அவருடைய முதலீட்டை பங்குச்சந்தையின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்பொழுது குறைவு. பங்குச்சந்தையின் போக்கை பொருத்து தன்னுடைய 'portfolio' வை அவர் மாற்றிருக்க வேண்டும்.
ஃபாண்டுகளில் கிடைக்கின்ற தொகையுடன் ஒப்பிடும்பொழுது பெரிய வித்தியாசம் இல்லை. இதற்கு ரிஸ்க் உள்ள பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. பதிலாக ஃபாண்டுகளிலேயே முதலீடு செய்திருக்கலாம்.
மேலும் அவர் வருடத்திற்கு செலுத்திய டிமேட் (Demat) fee மற்றும் பங்குகளை வாங்கி,விற்பதற்கு கொடுக்கும் brokerage fee ம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
நண்பருடைய முதலீடு 100 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், பங்குச்சந்தையின் வளர்ச்சியான 414 சதவீதத்தைவிட குறைவுதான்.
நம்முடைய முதலீடும் (கிட்டத்தட்ட) பங்குச்சந்தையின் வளர்ச்சிக்கு நிகராக மாறவேண்டும். கிடைக்கின்ற இலாபத்தை வைத்தாவது இந்த சோதனை முயற்சியில் இறங்கலாம்.
பங்குச்சந்தையில் ஒரு வீழ்ச்சி ஏற்படும்பொழுது எப்படி நம்முடைய முதலீட்டுக்கும் வீழ்ச்சி ஏற்படுகிறதோ அதேபோல பங்குச்சந்தையில் ஒரு ஏற்றம் இருக்கும்பொழுது அது நம்முடைய முதலீட்டிலும் இருக்க வேண்டும் அல்லவா?.
எனக்கு தெரிந்தவரை ....ஆன் - லைன் வர்த்தகத்தில் "Portfolio Tracker" என்ற வசதியில்லை. இருந்திருந்தால் நம்முடைய பங்குகளின் இலாபம், நஷ்டங்களைப் பற்றி நமக்கு ஒரு தெளிவும், புரிதலும் கிடைத்திருக்கும்.
அ) நாம் வாங்கிய பொழுது பங்கின் விலை/தேதி
ஆ) விற்கும் பொழுது அதன் விலை/தேதி
இ) Brokerage மற்றும் Demat fee
ஈ) நிகர இலாபம்/நஷ்டம்
இந்த விவரங்கள் இருந்திருந்தால் நாம் வாங்கி, விற்கும் பொழுது நம்முடைய பங்கு எவ்வாறு செயல்பட்டது/செயல்படுகிறது [இலாபம் - நஷ்டம்] என்ற விவரங்கள் தெரியவரும்.
பங்கின் பெயர்
வாங்கிய தேதி
வாங்கிய விலை
விற்ற விலை
விற்ற தேதி
Brokerage/Demat fee.
மேலே குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் Excelல் பதிவு செய்தல் நலம்.
இந்தியா ஜி.டி.பி வளர்ச்சி புள்ளிவிபரத்தில் குளறுபடி - அம்பலப்படுத்தும்
அரவிந்த் சுப்பிரமணியன்
-
இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரங்கள் தவறு என்று நிறுவும்
ஆய்வுக் கட்டுர...
5 years ago
4 comments:
In Moneycontrol.com, they are offering free service for maintaining our Portfolio, so that we can know our increase or decrease of value in percentage.
சாதாரணமாக போர்ட்போலியோவில் உள்ள ஷேர்கள் மிக குறுகிய காலத்தில் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொருதடவை வாங்கிவிற்கும்போதும் மணிகண்ட்ரோல்.காம் ல் அப்டேட் செய்வது மிகசிரமம்.
நீங்கள் சொல்வது போல் எக்ஸல் ஷீட் பயன்தரலாம்.
ஐசிஐசிஐ டைரக்டில் போர்ட்போலியோ ட்ராக்கர் இருக்கிறது ஆனால் அதில் ஹோல்டிங்ஸ் மட்டும் இருக்கும்.
வாங்கி விற்றுவிட்ட ஷேர்கள் ஜீரோ ஹோல்டிங்கிற்கு போய்விடும்.
ஐபிஓவில் கிடைத்து விற்ற ஷேர்கள் மைனஸ் ஹோல்டிங் என காண்பிக்கும்.
ஷேர் ஸ்பிலிட் அல்லது போனஸ் கிடைத்தால் அப்டேட் ஆகாது.
டிவிடண்ட் கிடைத்தது எல்லாம் என்ன ஆச்சு என்று கணக்கு வழக்கே இருக்காது.
லாபம் நஷ்டம் கண்டுபிடிக்கிறது மிக சிரமம்தான் எப்பிடியோ டீமேட் ஸ்டேட்மெண்ட் வெச்சு எங்க ஆடிட்டர் கண்டுபிடிக்கிறார்.
:-)))
(வழக்கம்போல்) நன்றி, சிவா!
சரியாக சொன்னிங்க!!
And so I am reassured. I know that others are also praying, and that God answers our prayers. God will lead us to just-right solutions that meet today's need for those unlimited loaves and fishes. and may have a [url=http://www.bocachicaplaya.com/hogansitoufficiale.htm]Hogan scarpe[/url]
little make up on. and due to the length of [url=http://www.bocachicaplaya.com/hogansitoufficiale.htm]Hogan[/url]
time. that she laid per mezzo di the morgue without being embalmed.
Post a Comment