பெரும்பாலும் முதலீட்டின்போது, நுழைவுக் கட்டணம் சுமார் 2.50% செலுத்த வேண்டியிருக்கும். ஓராண்டுக்குள் அந்த முதலீட்டைத் திரும்ப எடுத்தால், வெளியேறும் கட்டணம் சுமார் 2 - 3% கொடுக்க வேண்டி இருக்கும். முதலீடு ஓராண்டுக்கு உட்பட்டதாக இருக்கும்பட்சத்தில் குறுகியகால மூலதன ஆதாய வரியாக 10% செலுத்தவேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் 40% ரிட்டர்ன் என்று சொல்லப்பட்ட முதலீட் டில் கையில் கிடைக்கும் உண்மையான வருமானம் சுமார் 25% ஆகிவிடும்.
அதே நேரத்தில், நுழைவுக் கட்டணம் இல்லாத திட்டம், ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீடு என்றால் உண்மை யான வருமானம் சுமார் 35%க்கு மேல் இருக்கும்.
ஒரு திட்டம் 40% வருமானம் சம்பாதித்து இருக்கிறது என்றால், அது முதலீட்டாளர் கைக்கு வரும் முன்பு, அதனை விட அதிகமாக வருமானம் ஈட்டி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், அதன் நிர்வாகச் செலவு மற்றும் லாபத்தை எடுத்துக் கொண்டு, அதனைக் கழித்துதான் என்.ஏ.வி. மதிப்பை வெளியிடு கிறது. இது திட்டத்தின் தன்மை மற்றும் நிறுவனத்தைப் பொறுத்து 0.25% தொடங்கி 3% வரை செல்கிறது. இதையும் சேர்த்தால் உண்மையான வருமானம் என்பது அதிகம்.
மேலும் டிவிடெண்ட் வருமானத்தைக் கணக்கிடு வதிலும் நம்மில் பலருக்குக் குழப்பம் ஏற்படுகிறது.
டிவிடெண்ட் ஆப்ஷனை எடுத்துக்கொண்டால், முக மதிப்புக்குத்தான் டிவிடெண்ட் வழங்கப்படுகிறது. டிவிடெண்ட் சதவிகிதத்துக்கும் என்.ஏ.விக்கும் தொடர்பு கிடையாது.
ஒருவர் என்.எப்.ஓவின் போது 10 ரூபாய் முக மதிப்பில் 10,000 ரூபாய் முதலீடு செய் கிறார் என்றால் அவருக்கு 1,000 யூனிட்கள் (நுழைவுக் கட்டணம் இல்லாத நிலையில்) ஒதுக்கப்படும். இதே திட்டத்தில் ஓராண்டு கழித்து மற்றொருவர், என்.ஏ.வி. 20 ரூபாய் விலையில் அதே 10,000 ரூபாயை முதலீடு செய்தால், அவருக்கு 500 யூனிட்கள்தான் கிடைக்கும். இந்நிலையில் 40% டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டால், என்.எஃப்.ஓவில் வாங்கியவருக்கு டிவிடெண்டாக 4,000 ரூபாய் கிடைக்கும். இடையே முதலீடு செய்த வருக்கு டிவிடெண்டாக 2,000 ரூபாய்தான் கிடைக்கும்.
இருவரின் முதலீட்டு தொகை ஒன்றாக இருந்தாலும், கையில் இருக்கும் யூனிட்டுக்கு ஏற்ப ரிட்டர்ன் கிடைத்துள்ளது.
நன்றி: நாணய விகடன்
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
19 comments:
Good information. What are the tax implications on these dividends?
- Ravi
<==
கூட்டிக் கழித்துப் பார்த்தால் 40% ரிட்டர்ன் என்று சொல்லப்பட்ட முதலீட் டில் கையில் கிடைக்கும் உண்மையான வருமானம் சுமார் 25% ஆகிவிடும். ==>
அப்புறம் ஏன் 50% 80% லாபம்(ஒரு வருடத்திற்க்கு) என்று சொல்லிகொள்கிறார்களோ தெரியவில்லை
DEAR THENDRAL
HAPPY DIWALI TO U & UR FAMILY
நன்றி, சிவா!
உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!
அட, இதெல்லாம் வேற இருக்கா?
நான் இப்போதான், இதில் முதல் பண்ணலாமானு யோசிச்சிகிட்டு இருக்கேன்.
தகவல்களுக்கு நன்றி.
தங்களுக்கும், தங்கள் குடுபத்தினருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள், நண்பரே!
தங்கள் பணி, அனைவரின் வாழ்க்கையிலும்
ஒளியேற்றட்டும்; பொருட்செல்வத்தைப் பெருக்கட்டும்!
அன்புடன்,
ஜீவி
ஆஹா இந்த பதிவுக்கு கமெண்ட் போட்டாதான் புது பதிவு போடுவீங்களா?
"மியூச்சுவல் ஃபண்டில் உண்மையான வருமானம் எவ்வளவு?"
1995 செப்டம்பர் மாதம் 8ம் தேதி NAV ரூ. 10 க்கு துவங்கிய ஒரு மியூச்சுவல் பண்டின் இன்றைய NAV ரூ.400
அதாவது 12 வருசம் முன் 1லட்ச ரூபாய் போட்டிருந்தால் இப்ப 40 லட்சம் 5 பைசா வரி கிடையாது.
அது ரிலையன்ஸ் க்ரோத் பண்ட் க்ரோத் ப்ளான்
ரிலையன்ஸ் விஷன் NAV ரூ250
இது செப்டம்பர் 7, 1995ல் துவங்கப்பட்ட ஃபண்ட்
//
கூட்டிக் கழித்துப் பார்த்தால் 40% ரிட்டர்ன் என்று சொல்லப்பட்ட முதலீட் டில் கையில் கிடைக்கும் உண்மையான வருமானம் சுமார் 25% ஆகிவிடும். ==>
அப்புறம் ஏன் 50% 80% லாபம்(ஒரு வருடத்திற்க்கு) என்று சொல்லிகொள்கிறார்களோ தெரியவில்லை
//
என்ன அவசரம்?
:-))))))))))
மஙக்ளூர் சிவா,
பரஸ்பர சகாய நிதியில் சொல்லப்படும் சதவீத வளர்ச்சியைப் பற்றித்தான் நான் சொன்னென்(அங்கலாய்த்தேன் என்ற வார்த்தை சரியாக இருக்குமோ?).அது நிறைய லாபம் கொடுக்கவில்லை என்றல்ல.நானும் 2000ஆம் ஆண்டில் முதலீடு செய்திருந்த பரஸ்பர சகாய நிதியை சென்ற மாதம்தான் அதிக லாபம் தரும் வேறொரு நிதிக்கு மாற்றினேன். முன்பெல்லாம் இந்த அளவுக்கு பரஸ்பர சகாய நிதியை
ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பதில்லை.
நீங்கள் சொன்னதற்க்கே வருவோம்.
பத்து வருடங்களுக்கு முன்பு பரஸ்பர சகாய நிதியிலோ,பங்கிலோ போட்டிருந்தால் பங்குச் சந்தை கீழே விழும்போது இன்னும் அவர் பணத்தை எடுக்காமல் அதிலேயே வைதிருப்பார் என்பது சந்தேகமே.
நான் மார்ச் 2000ல் கோடக் டெக்னாலஜி நிதியில் பணம் போட்டேன்.அப்போது அதன் ஆரம்ப விலை ரூ.10.அதன் மதிப்பு குறைய ஆரம்பித்ததும் பணத்தை எடுத்துவிட்டேன். எட்டு வருடங்கள் கழித்தும் அதன் விலை அதே ரூ.10 =)))
@சிவா
//
நீங்கள் சொன்னதற்க்கே வருவோம்.
பத்து வருடங்களுக்கு முன்பு பரஸ்பர சகாய நிதியிலோ,பங்கிலோ போட்டிருந்தால் பங்குச் சந்தை கீழே விழும்போது இன்னும் அவர் பணத்தை எடுக்காமல் அதிலேயே வைதிருப்பார் என்பது சந்தேகமே.
//
அப்படி வைத்திருந்துதான் வாரன்பப்பெட் உலகத்திலேயே இரண்டாவது பெரிய பணக்காரர் ஆனார் என தகவல்
//
நான் மார்ச் 2000ல் கோடக் டெக்னாலஜி நிதியில் பணம் போட்டேன்.அப்போது அதன் ஆரம்ப விலை ரூ.10.அதன் மதிப்பு குறைய ஆரம்பித்ததும் பணத்தை எடுத்துவிட்டேன். எட்டு வருடங்கள் கழித்தும் அதன் விலை அதே ரூ.10 =)))
//
இது செக்டார் பண்ட்
எனக்கு இந்த பண்ட் பற்றிய விவரங்கள் தெரியலை வலைதளங்களில் பார்க்கிறேன்.
ஆனால் நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கும்போது 2000 க்ராஷ்ல் இதன் NAV மிக மிக குறைந்திருக்கும் அப்போது திரும்ப வாங்கியிருக்க வேண்டும்.
2002ல் இருந்து 2007 மே - ஜீன் வரைக்கும் டெக்னாலஜி பங்குகள் நன்றாகவே செயல்பட்டன.
இப்போது டாலர் வீழ்ச்சியால் டெக்னாலஜி பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. நல்ல பங்குகளை நம்பி தாராளமாக வாங்கலாம்.
<===
நான் இப்போதான், இதில் முதல் பண்ணலாமானு யோசிச்சிகிட்டு இருக்கேன் ==>
சீக்கிரமா வாங்க.அப்புரம் லேட்டாயிடப்போகுது =)
<== அப்படி வைத்திருந்துதான் வாரன்பப்பெட் உலகத்திலேயே இரண்டாவது பெரிய பணக்காரர் ஆனார் என தகவல் ==>
=))) ஆனா நாம் சாதாரண ஆளாச்சே.
எனக்கு ஜெயப்பிரகாஷ் கைட்ரோவில் 200 பங்குக்கு மார்ச் 2004ல் ஒதுக்கீடு கிடைத்தது.அப்பொது பங்கொன்றின் விலை ரூ.32 . சுமார் 2.5 வருடங்கள் வைத்திருந்தேன். ரூ30.க்குளேளேயே இருந்தது. விற்றுவிட்டேன். இப்போது அதன் விலை 80க்கும் மேல். யாருக்கு தெரியும் அது இப்படி வரும் என்று =(
Dear Thendral..
Plz keep write on your blog..
So informative..
I dig it
Surya
Chennai
butterflysurya@gmail.com
ரவி,
http://nanayam2007.blogspot.com/2007/10/pan-card.html பதிவிலுள்ள மறுமொழி...
(உங்களின் கேள்விக்கு இது பதில் அளிக்கும் என்ற எண்ணத்தில்...)
//
Is this "Captial Gain Tax" relief after one year is applicable only for mutual fund on equity? or it is applicable for any kind of mutual fund?
//
//
எல்லாவகை மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச்சந்தை முதலீட்டுக்கும் இது பொருந்தும்.
//
ம்யூச்சுவல் ஃபண்ட் பொருத்தவரை Equity Fund& Balanced Fund க்கு மட்டுமே பொருந்தும்.
MIP, MONEY MARKET, LIQUID FUNDKகளுக்கு பொருந்தாது.
வாங்க தஞ்சாவூரான் & ஜீவி!
வாழ்த்துக்கு நன்றி, ஜீவி!
தங்கள் குடுபத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!!
//அதாவது 12 வருசம் முன் 1லட்ச ரூபாய் போட்டிருந்தால் இப்ப 40 லட்சம் 5 பைசா வரி கிடையாது.
அது ரிலையன்ஸ் க்ரோத் பண்ட் க்ரோத் ப்ளான்//
நல்ல உதாரணம், ம.சிவா! ஒவ்வொருவருடைய portfolioல் இருக்க வேண்டிய ஃபண்ட்!
சிவா,
//நான் மார்ச் 2000ல் கோடக் டெக்னாலஜி நிதியில் பணம் போட்டேன்.அப்போது அதன் ஆரம்ப விலை ரூ.10.அதன் மதிப்பு குறைய ஆரம்பித்ததும் பணத்தை எடுத்துவிட்டேன். எட்டு வருடங்கள் கழித்தும் அதன் விலை அதே ரூ.10 =)))//
Kodak Tech Fund யைப் பற்றி Value Research Online-லிருந்து...
Tech Fundயைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கே
நன்றி சூர்யா!
தென்றல்,தகவலுக்கு நன்றி.
எனக்கு படிப்பினை:பங்கில் மட்டுமல்ல,பரஸ்பர சகாயநிதியிலும் அவ்வப்போது கண்காணித்து,நிலைமைக்குத் தக்கவாறு பணத்தை எடுத்தோ,வேறு நிதிகளில் மறு முதலீடு செய்தோ, லாபம் குறையாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். நிதி நிர்வாகி கவனித்துக்கொள்வார் என்று சும்மா இருக்கக்கூடாது.
Hi !.
might , probably curious to know how one can manage to receive high yields .
There is no initial capital needed You may begin to receive yields with as small sum of money as 20-100 dollars.
AimTrust is what you thought of all the time
AimTrust incorporates an offshore structure with advanced asset management technologies in production and delivery of pipes for oil and gas.
It is based in Panama with structures everywhere: In USA, Canada, Cyprus.
Do you want to become really rich in short time?
That`s your chance That`s what you wish in the long run!
I`m happy and lucky, I started to take up real money with the help of this company,
and I invite you to do the same. If it gets down to choose a proper partner utilizes your funds in a right way - that`s AimTrust!.
I take now up to 2G every day, and my first investment was 500 dollars only!
It`s easy to get involved , just click this link http://kawyvutot.freecities.com/nahipy.html
and lucky you`re! Let`s take our chance together to feel the smell of real money
Post a Comment