Tuesday, November 13, 2007

Rich Dad, Poor Dad - II

Rich Dad, Poor Dad - முதல் பகுதி

மூன்று வகையான வருமானம் உள்ளது.

1) Earned Income - பணத்திற்காக வேலை செய்வது!! மாச சம்பளக்காரர்கள். இவர்கள் முதல் வகை. Poor dadன் அறிவுரையே 'நல்ல வேலை கிடைப்பது'தான்.

2) Passive Income - பணம் நமக்காக வேலை செய்வது. ராயல்டி - நாம் எழுதின புத்தகம் அல்லது பாடல் மூலம் வரும் வருமானம். இன்னும் எளிமையா சொல்லணும்னா வீடு கட்டி வாடகையின் மூலம் வரும் வருமானமும் இந்த வகையைச் சார்ந்தது். இவர்கள் இரண்டாவது வகை.

3) Portfolio Income: பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், ஃபாண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம். நாம் ஓய்வெடுக்கும் போதும் நம் பணம் நமக்காக 'உழைப்பது்'. இது மூன்றாவது வகை.

Rich Dadன் அறிவுரையே... முதல் வகை (Earned Income) வருமானத்தை இரண்டாம் மற்றும் மூன்றாம் வகை வருமானமாக மாற்றுவதில்தான் இருக்கிறது.

Rich Dadன் சிதம்பர ரகசியம்....
"Know the difference between assets and liabilities"; "Buy Assets"

"Rich people acquire assets; The poor and middle class acquire liabilities, but they think they are assets."

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால்....

Asset -- Money in our pocket

Liabilities - Money out of our pocket.


~~~~~~~~~~~~~

வாழ்த்துக்கள்...!!

துறைச்சார்ந்த பதிவுகள்..... அதுவும் பங்கு வணிகம், பொருளாதாரம், அன்னிய செலவாணி... இப்படி பதிவுகள் வருவது மிகவும் அபூர்வம். அந்த வகையில் புதுசாக வந்த இந்த நண்பர்களுக்கு நமது வாழ்த்துக்களும்....நல்வரவும்...!!

1. மங்களூர் சிவாவின் think BIG

2. சாமான்யனின் பங்குவணிகம்

3. வங்கியிலிருந்து விருப்ப ஓய்வு எடுத்து தன்னுடைய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ள பானுமதி அம்மாவின் என் வீடு !

~