Monday, November 26, 2007

உலகின் சிறந்த பங்குச்சந்தை: இந்தியா முதலிடம்

உலகளவில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள பங்குச்சந்தை பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. கடந்த 3 மாத கால வளர்ச்சியின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பங்குச்சந்தை குறித்து ஆய்வு செய்து வரும் மார்கன் ஸ்டேன்லி கேபிடல் இண்டர்நேஷனல்- பார்ரா (MSCI Barra) வெளியிட்ட அறிக்கை இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 3 மாதத்தில் இந்திய பங்குச் சந்தை 33.64 % வளர்ச்சியை அடைந்து உள்ளதாகவும், இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு 400 பில்லியன் டாலர் லாபம் கிடைத்து உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதே கால கட்டத்தில் கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து நாட்டு பங்குச்சந்தைகள் சுமார் 28 சதவீத வளர்ச்சியையே எட்டியுள்ளன.

ஆனால் வளர்ந்த நாடுகள் பட்டியிலில் உள்ள அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரியா, ஸ்வீடன் மற்றும் பெல்ஜியம் நாட்டு பங்குச்சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தி உள்ளன. இங்கிலாந்து பங்குச்சந்தை மட்டும் 0.6% வளர்ச்சியை எட்டியுள்ளது.

இதே போல் லாபத்தை பொறுத்த வரை இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேசில் சந்தை 31% லாபத்தையும், சீன சந்தை 17 சதவீத லாபத்தையும் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: MSN தமிழ்

2 comments:

said...

நல்ல செய்தி...

இதை வரும் காலாண்டு தக்க வைக்குமா..?

said...

கேட்க நல்லாத்தான் இருக்கு.