மத்திய நிதி அறிக்கை / திட்டமிடல் 2008 - 2
- சிறிய கார்கள் மீதான கலால் வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பால் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை விலை குறைய வாய்ப்புள்ளது.
- இரு சக்கர வாகனங்களுக்கான வரி 16 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களின் விலை குறையும்.
- ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணம் கையாள்வதற்கான வரி [Banking Cash Transaction Tax: (BCTT) ] ஏப்ரல் 1, 2008ம் தேதியிலிருந்து கிடையாது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ 25,000 மேல் இனிமேல் எடுக்கலாம்.
- கடலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், ஆண்டிப்பட்டி(!) போன்ற இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரப் பகுதிகளில் மருத்துவமனை துவங்கினால் 5 ஆண்டுகளுக்கு வரி இல்லை.
- அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமாக ஆறாவது ஊதியக் குழு அடுத்த மாதம் (மார்ச் 2008) தனது அறிக்கையை தாக்கல் செய்யப்போகிறார்கள். அதன்பின் அதை ஆராய்ந்து அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கபடும். [ அதுவரை விலைவாசி கட்டுப்படுத்துவீங்களா? ]
- ஆந்திரப்பிரதேசம், பிகார் மற்றும் ராஜஸ்தானில் மூன்று ஐஐடிக்கள் நிறுவப்படும். மேலும் நாடு முழுவதும் 16 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.
- போபால், திரிபுராவில் அகில இந்திய அறிவியல் கழகங்கள் (IISc) உருவாக்கப்படும்.
- நாடு முழுவதும் அடுத்த ஆண்டில் 6,000 பள்ளிகளைக் கட்ட திட்டம். கல்விக்கான ஒதுக்கீடு 20 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.
1 comments:
உடனடி பகிர்தலுக்கு மிக்க நன்றி.
இந்த 60 கோடி!? ரூபாய் வருவாய்க்கு என்ன திட்டம
Post a Comment