Friday, February 29, 2008

மத்திய நிதி அறிக்கை 2008 - 3 [ஒதுக்கீடு ]

 • மண் பரிசோதனை மையங்களுக்கு 75 கோடி ரூபாய்.
 • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய். [சிரிக்காதீங்க... அமைச்சர் சீரியசாதான் சொன்னாரு...!]
 • பொது விநியோக திட்டத்துக்காக ரூ 32,676 கோடி மானியம்.
 • தேசிய தோட்டக்கலை அமைப்புக்கு 1100 கோடி ரூபாய்.
 • தேயிலை ஆராய்ச்சி அமைப்புக்கு சிறப்பு ஒதுக்கீடாக 20 கோடி ரூபாய்.
 • தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்திற்கு 12,966 கோடி ரூபாய். [நீங்க பண்ற வளர்ச்சி திட்டங்களின் விவரங்களை அறிவிப்பு பலகையாக வைத்தால் அந்தப் பக்கம் போற வர்ற எங்களுக்கும் புரியுமில்லை.... எதுக்கெதுக்கோ தோரணங்களாம் வைக்கிறீங்க. ஒரு திட்ட வளர்ச்சியை பத்தி ஒரு அறிவிப்பு பலகை வைக்கமாட்டீங்களா?]
 • குழந்தைகள் மேம்பாட்டுக்காக அரசு இந்த ஆண்டு 24 சதவீதம் உயர்த்துகிறது. [ஓ... அப்பனா போன வருடமும் இதுமாதிரி ஒரு திட்டம் இருந்ததா?]
 • பள்ளிகளில் குடிநீர் வசதியை ஏற்படுத்த ரூ 200 கோடி.
 • துப்புரவு திட்டங்களுக்கு ரூ. 1200 கோடி.
 • தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ 75 கோடி.
 • தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ 9 கோடி.
 • சென்னை அருகே கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை நிறுவ ரூ 300 கோடி.
 • கல்வி நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் மதிய உணவு திட்டத்திற்கு ரூ. 8,000 கோடி.
 • பாரத் நிர்மாண் திட்டத்துக்காக ரூ 31,280.
 • நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் மொத்தம் 1,05,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம்.


2007-2008 ஆண்டில் நிறைவேறிய/நிறைவேற போகும் திட்டங்கள் இங்கே!!

முழு உரை

ஒண்ணும் புரியலைப்பா... நிதி அமைச்சர்கிட்ட நேரா கேள்விகேட்டாதான் புரியும் நினைக்கிறவங்க இங்க போய் முயற்சி செய்து பார்க்கலாம்.

10 comments:

said...

தினமணியில் வந்த

சலுகையா, சாமர்த்தியமா?

said...

1) அரசின் நிதிநிலை அறிக்கை: சில குறிப்புகள்/தகவல்கள்

2) பத்திரியின் எண்ணங்கள்: 2008-09 இந்திய பட்ஜெட்

said...

3) முதல் பட்ஜெட்டும், இன்றைய பட்ஜெட்டும்: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மலரும் நினைவுகள் :

இந்தியா சுதந்திரம் பெற்ற பின், முதல் பட்ஜெட், 1947 நவம்பரில் தாக்கல் செய்யப்பட்டது. அப் போது கடும் உணவு பற்றாக்குறை நிலவியது. திருமணத்துக்கு 30 பேரை மட்டுமே அழைக்க வேண்டும், என கட்டுப்பாடு இருந்தது. ஒவ்வொரு திருமணம் நடக்கும் போதும், மண்டபத்தினுள் போலீசார் நுழைந்து, எத்தனை இலைகள் போடப் பட்டுள்ளன, என, எண்ணிப் பார்ப்பது உண்டு.

எனது மூத்த சகோதரர் திருமணம், திருச்சியில், 1947 செப்டம்பரில் நடந்தது. எங்களுடையது கூட்டு குடும்பம்; உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம். எனவே, திருமண சாப்பாடு சாப்பிட, பல்வேறு ஓட்டல்களுக்கு, ரகசியமாக, சிறு, சிறு குழுக்களாக சென்றோம்.

ஆனால், இப்போது, ஆயிரக்கணக்கான பேரை அழைத்து,மிகவும் ஆடம்பரமாக திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

இன்றைய இந்தியாவில், 110 கோடி பேருக்கு உணவு அளிப்பதோடு, எவ்வித கட்டுபாடும் இன்றி, திருமணங்கள் மற்றும் விழாக்கள் நடத்தப்படுகின்றன என்பது பெருமைக்குரிய விஷயம்.

இந்தியாவில் 1943ம் ஆண்டு, அரிசி உற்பத்தி மிகவும் குறைவாக இருந்தது. சுதந்திரம் பெற்ற 1947-49ல், நிலைமை, மேலும் மோசம் அடைந்தது. பர்மாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய முடியாததால், இந்நிலை ஏற்பட்டது. அப்போது ஜப்பானின் ஆக்கிரமிப்பில் பர்மா இருந்தது. எனவே, அரிசி இறக்குமதி தடைப்பட்டது. வீடுகளில், அரிசி உணவு சாப்பிடுவதிலும் கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே அரிசி உணவு. இரண்டாவது வேளை உணவுக்கு மரவள்ளி கிழங்கு தான். மர வள்ளிக் கிழங்கில் இருந்து சுவையான உணவு தயாரிப்பதில், என் அத்தை கை தேர்ந்தவர். இந்தியா சுதந்திரம் அடைந்த போது, எனக்கு 22 வயது. அப்போது, எனக்கு மாணவர் உதவி தொகையாக 30 ரூபாய் கிடைத்தது. எனவே, ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது. அப்போது ஒரு மாத உணவு செலவு (தினமும் மூன்று வேளை உணவு) ரூ.15. நாட்டை நிர்வகித்து வந்த வைஸ்ராயின் மாத சம்பளம் ரூ.25 ஆயிரம். இதற்கு கடும் எதிர்ப்பு காணப்பட்டது. இந்த அளவுக்கு அதிக சம்பளம் கொடுக்கலாமா என மக்கள் அன்று கோபப்பட்டனர்.

திட்ட கமிஷனில் பணியாற்றிய நான், 1980ம் ஆண்டில், வாங்கிய கடைசி சம்பளம் ரூ.2,250. அந்த தொகையை வைத்து நானும், எனது குடும்பமும் காலம் தள்ளினோம். எனது மூன்று மகள்களையும் படிக்க வைத்தேன்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, நாட்டின் மக்கள் தொகை 35 கோடி பேர். அவர்களில் 70 சதவீதம் பேர் விவசாயிகள். ஆனால், விவசாய துறை நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. 1940-47ம் ஆண்டுகளில், இத்துறையின் வளர்ச்சி 0.01 சதவீதம் தான். வேகமாக விளைவித்து பலன் காணலாம் என்பதால், நீலகிரி பகுதி விவசாயிகள் உருளைக் கிழங்கு பயிரிட்டனர்.

நாட்டில், மது விலக்கு அமல் படுத்தப்பட்டதால், வாழ்க்கை தரம் உயர்ந்தது; சமூக அமைப்பும் வலுப்பெற்றது.

முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, நான் இளைஞனாக இருந்தேன். பட்ஜெட் முழுவதையும் படித்து பார்த்து தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. எனினும், முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு சொன்ன வார்த்தைகள், இன்னும் என் காதில் ஒலித்து கொண்டு இருக்கிறது.

'விவசாயம் காத்து இருக்க முடியாது; ஆனால், மற்றவை காத்திருக்கலாம் ' - இது தான் நேருவின் வார்த்தைகள் . அவரது காலத்தில், விவசாய துறையில், ஏராளமான முதலீடுகள் செய்யப்பட்டன.

'ஒரு குழந்தையோ, தாயோ இரவு உணவின்றி பட்டினியாக, சுதந்திர இந்தியாவில் வாழக் கூடாது' - இது புரட்சிக் கவிபாரதியின் வார்த்தைகள்.

நாட்டின் பெரும்பான்மையான ஊட்டச்சத்து குறைந்த நிலை, இன்றும் காணப்படும் போது, 60 ஆண்டுகளுக்கு முன், பாரதி சொன்ன வார்த்தைகள் இன்றைய சூழ்நிலைக்கும் பொருத்தமானதாகவே உள்ளது.

நன்றி: தினமலர்

said...

தினமணியில் (03/03/08)வந்த
சலுகையா, சாமர்த்தியமா?

-- ஈயுண்ணி

பட்ஜெட் போடப்பட்டவுடனேயே அதை வரவேற்றும் எதிர்த்தும் கருத்துச் சொல்ல வேண்டியது மரபு. (இல்லாவிட்டால் பட்ஜெட்டை நாம் புரிந்துகொள்ளவில்லை என்ற குட்டு அம்பலமாகிவிடும்).

சிதம்பரத்தின் பட்ஜெட் எப்போதுமே "ஜெட்' ரகம்தான். அதாவது, நல்ல வேகம். புறப்பட்ட சில வினாடிகளுக்கெல்லாம் வான வீதியில் தெளிவான, அழகான இரு பட்டையாக ""சலுகைகளும், திட்டங்களும்'' தென்படும். சில மாதங்கள் கழித்து, வானத்தில் தோன்றிய புகைப் பட்டைகள் வேகமாக மறைந்துவிடுவதைப் போலவே கலைந்து காணாமலே போய்விடும். இந்த பட்ஜெட்டும் விதிவிலக்கு அல்ல.

வேலைவாய்ப்பைப் பெருக்கவோ, விலைவாசியைக் கட்டுப்படுத்தவோ, பொது விநியோக முறையைச் சீரமைக்கவோ, பொருளாதாரத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வை நீக்கவோ, ஏழைகளைக் கைதூக்கிவிடவோ, நதிகளை இணைக்கவோ எந்த சிறப்புத் திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. (இதுவரை வந்த பட்ஜெட்டுகள் எதிலுமே இல்லாதபோது, இதில்மட்டும் குறை காண்பது சரியல்ல. எனவே சிதம்பரத்தை மன்னிப்போம்.)

4 கோடி விவசாயிகளுக்கு 60,000 கோடி ரூபாய் கடன் ரத்து என்று அறிவித்துள்ளார். இடதுசாரித் தலைவர்கள் பாணியில் வகுத்துப் பார்த்தால், தலைக்கு 15,000 ரூபாய் மட்டுமே தேறுகிறது; இது போதுமா?

"வக்கீல்' சிதம்பரம் இதிலும் ஒரு வில்லங்கத்தைச் சேர்த்திருக்கிறார். 50,000 கோடி கடன்தான் "அவுட்-ரைட்' தள்ளுபடி. எஞ்சிய 10,000 கோடி தள்ளுபடி வேண்டும் என்றால் 30,000 கோடி கடனைக் கட்டியாக வேண்டும். இது சலுகையா, சாமர்த்தியமா?

அரிசி, கோதுமை, மக்காச்சோளம், கேழ்வரகு, கரும்பு, பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், இதர காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றின் சாகுபடி பெருக, கொள்முதல் விலையை இரட்டிப்பாக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

50,000 கோடி ரூபாயைச் செலவிட்டு நாட்டின் 350 மாவட்டத் தலைநகரங்களில் குளிர்பதனக் கிடங்குகளைக் கட்டி சாகுபடியாளர்கள் குறைந்த கட்டணத்தில் பூ, பழம், காய்கறிகளைச் சேமித்துவைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்க உதவியிருந்தால் விவசாயத்துக்கு ஊக்குவிப்புக் கிடைத்திருக்கும்.

அரசு வங்கியிடமும் கூட்டுறவு வங்கியிடமும் கடன் வாங்காமல் வேறு அமைப்பிடம் நகைகளையோ, வீட்டையோ, வேறு சொத்துகளையோ அடமானம் வைத்திருந்தால் அவர்களுடைய கடன் என்ன ஆகும்?

கடனே வாங்க வேண்டாம் என்று சொந்த வீடு, ஆடு-மாடு, வண்டி போன்ற உடைமைகளை விற்று விவசாயம் செய்திருந்தால் அத்தகையவர்களுக்கு என்ன நிவாரணம்?

நிவாரணம் கொடுத்திருக்கவே கூடாது என்பதல்ல, விவசாயத்துக்காகக் கடன் வாங்கிய அனைத்து தரப்பினருக்கும் நிவாரணம் தரப்பட வேண்டும் என்பதற்காக இதைக் கேட்கிறோம்.

இப்போது கடன் நிவாரணம் பெறும் ஒரு விவசாயியின் நிலையில் இருந்து, சிதம்பரம் அறிவித்த சலுகையைப் பற்றி யோசிப்போம். ஒரு விவசாயி வங்கியில் 10,000 ரூபாய் கடன் வாங்குகிறார். அது வட்டி, அபராத வட்டி என்று விரிவடைந்து 20,000 ரூபாய் ஆகிவிடுகிறது. இப்போது அந்தக் கடன் முழுதாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் அந்த விவசாயிக்கு ஏற்படுவது, இந்தக் கடன் தீர்ந்தது என்ற நிம்மதிதானே தவிர, வேறில்லை.

அவரே அடுத்த போகம் சாகுபடி செய்ய வேண்டும் என்றால் அதே வங்கியில் சென்று கடன் கேட்டு, விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டும். அதற்குப் பதிலாக, விவசாயிகள் வாங்கிய கடன் தொகையை (அசலை மட்டும்) அப்படியே தந்து, ""மீண்டும் சாகுபடியை ஆரம்பியுங்கள், விதை, உரம், மருந்து, தண்ணீர், மின்சாரம் எல்லாம் தருகிறோம்; கடனைச் சிறுகச் சிறுகக் கட்டுங்கள், வட்டி மட்டும் தள்ளுபடி'' என்று செயல்படுத்தினால் எப்படி இருக்கும்?

தொழில்துறையிலோ, சேவைத் துறையிலோ இத்தனை கோடிதான் முதலீடு செய்ய வேண்டும், இவ்வளவு பேரைத்தான் வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும், இவ்வளவுதான் சம்பளம் கொடுக்க வேண்டும், இவ்வளவு லாபம்தான் சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு இல்லை. வக்கீல், டாக்டர், ஆடிட்டர், நடிகர், சுய தொழில் செய்கிறவர்களுக்கெல்லாம் இப்படி கட்டுப்பாடுகள் இல்லை. விவசாயிகளுக்கு மட்டும் நஞ்சையாக இருந்தால் 15 ஸ்டாண்டர்டு ஏக்கர், புஞ்சையாக இருந்தால் 30 ஏக்கர் என்று நில உச்சவரம்பு சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படுகிறது. அது ஏன்? பண்ணையார்கள்தான் பெரிய சுரண்டல் பேர்வழிகளாகவும், சமூக விரோதிகளாகவும் இருந்தார்களா?

இப்போது விவசாய வேலைக்கு ஆள்கள் கிடைக்காமல் சவுக்குத் தோப்பு வைக்கிறார்கள் அல்லது வீட்டு மனைகளாக விற்கிறார்கள். பரம்பரையாக விவசாயம் செய்தவர்கள் அத் தொழிலை வெகுவேகமாகக் கைவிட்டு வருகிறார்கள்.

பெரிய தொழிலதிபர்கள் அல்லது நிறுவனங்கள் நிலங்களை வளைத்துப்போட்டு "கார்ப்பரேட் பண்ணையம்' செய்வதை அரசு மறைமுகமாக ஊக்குவிக்கிறது. நல்ல விளை நிலங்கள் இறால் பண்ணைகளாகின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் தொழிலதிபர்கள் விளைநிலங்களைக் கையகப்படுத்த உதவிகளைச் செய்து, கைமாற்றிக் கொடுக்கிறது அரசு.

இந்தப் பின்னணியில் இப்போது சொல்லுங்கள், விவசாயத்தை வாழவைக்கும் நல்ல அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் புதிதாக ஏதும் இருக்கிறதா?

said...

4) பட்ஜெட்டா, தேர்தல் அறிக்கையா?
டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்
(முன்னாள் அமைச்சரவைச் செயலர்)

நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டை, அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை என்றே பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

விளைவு எப்படியாகத் திரும்பினாலும், 60,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளின் வாக்குகளைக் கவரும் உத்தி என்றே அனைவரும் கூறுகின்றனர்.

இப்போதைய பட்ஜெட்டிலேயே குறிப்பிடத்தக்க அம்சம் என்று சொன்னால் அது இந்த விவசாயக் கடன் ரத்துதான். ஜூன் மாதம் வந்த பிறகு, பருவமழை எப்படிப் பெய்கிறது என்பதைப் பார்த்துவிட்டு தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி தீர்மானிக்கும், அதற்கேற்ப மக்களவையைக் கலைத்துவிடுமாறு குடியரசுத் தலைவருக்கு அது பரிந்துரைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

நாட்டின் இப்போதைய பிரச்னைகளுக்கெல்லாம் காரணமே, 4 ஆண்டுகளுக்கு முன்னால் ஆட்சியை இழந்த பாரதிய ஜனதாவும் அதன் சங்கப் பரிவாரங்களும்தான் என்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தனது சுபாவத்துக்கு மாறாகப் பொரிந்து தள்ளினார்.

அதையும், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசுத்தரப்பில் காட்டும் அவசரம் ஆகிய இரண்டையும் பார்க்கும்போது, தேர்தல் விரைவில் வரப் போகிறது என்று தெரிகிறது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு தேசிய அளவில் கருத்தொற்றுமை ஏற்பட அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று பேசியிருக்கிறார் மன்மோகன் சிங். அத்துடன், வாஜ்பாயை இந்திய அரசியலின் இப்போதைய பீஷ்ம பிதாமகர் என்று வர்ணித்து, இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த கட்சி விசுவாசம் என்ற குறுகிய தளைகளிலிருந்து விடுபட்டு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த வேண்டுகோள்தான் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. வாஜ்பாய் தனது கட்சியின் நிலையை மீறி அப்படி ஏதும் ஆதரவு தந்துவிட மாட்டார். அப்படியே அவர் தருவதாக இருந்தால், அது சங்கப் பரிவாரங்களிடையே பிளவை ஏற்படுத்திவிடும்.

தேசிய கருத்தொற்றுமை ஏற்படப் பாடுபடுவோம் என்று பிரதமர் பேசியிருப்பதை இந்திய அரசியலின் பின்னணியுடன் பொருத்தி, சற்று ஊன்றிக் கவனிப்போம். நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஏற்றுக்கொண்டது நம் நாடு. மக்களிடம் நேரடியாகக் கருத்தறியும் முறையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அமைப்பான நாடாளுமன்றம்தான் நமது கொள்கைகளை வகுக்கும் உயர் அமைப்பு. இந் நிலையில் தேசிய கருத்தொற்றுமை என்றால் நாடாளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு அல்லது மூன்றில் இரு மடங்கு உறுப்பினர்களின் ஆதரவு என்றுதானே இருக்க முடியும்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து குளிர்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. அதன் மீது வாக்கெடுப்பு நடப்பதை மிக்க கவனத்துடன் செயல்பட்டு தவிர்த்துவிட்டார்கள். ஆனால் வெவ்வேறு தரப்பாரும் பேசிய விதத்திலிருந்தும் அவர்கள் தெரிவித்த கருத்துகளிலிருந்தும் இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது.

ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதுதான் நல்லது என்கிறது அரசு. இந்த ஒப்பந்தம் பயனுள்ளதாக இருக்குமா, நம்முடைய எதிர்காலம் என்னவாகும், நம்முடைய ராணுவ பாதுகாப்பு எப்படி இருக்கும், அமெரிக்காவுடன் ராணுவரீதியாக நாம் கூட்டாளியாக மாற வேண்டியிருக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால் அந்த விவாதம் முற்றுப்பெறவில்லை; அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்பட்டுவிட்டதாகவும் கூறிவிட முடியாது.

நாடாளுமன்றத்தின் வெளிப்படையான ஆதரவு இன்றி, சர்வதேச ஒப்பந்தங்களை அரசு செய்துகொள்ளலாம் என்று நமது அரசியல் சட்டம் அனுமதியளிப்பது உண்மைதான்; ஆனால் அமெரிக்காவில் இது வழக்கம் அல்ல. அங்கு எந்த ஒரு சர்வதேச ஒப்பந்தமும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அமலுக்கு வரும்.

தான் விரும்பும் நாட்டுடன், விரும்பிய வகையில் அரசு ஒப்பந்தம் செய்துகொள்ளத் தடைகள், தடங்கல்கள் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் நமது அரசியல் சட்டம் அத்தகைய சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் கருத்தைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை, அதன் ஒப்புதலும் அவசியம் இல்லை என்ற நோக்கில் அரசியல் சட்டம் எழுதப்படவில்லை என்பதை நிச்சயமாகக் கூற முடியும். அப்படியொரு நோக்கம் இருந்தது என்றால் அது நம்முடைய ஜனநாயக நடைமுறையையே கேலிக்கூத்தாக்கிவிடுவதாகத்தான் அர்த்தம்.

ஒப்பந்தத்தின் சாதக, பாதகங்களைக் கருத்தில் கொள்ளாமல், நாடாளுமன்றத்தின் கருத்துகளை அலட்சியப்படுத்திவிட்டு அரசு செயல்பட முடியாது. அப்படிச் செயல்பட்டால், நிர்வாக நடவடிக்கைகளை விரைந்து நடத்துவதற்காகக் கொடுக்கப்பட்ட உரிமையை தவறாகச் செயல்படுத்துவதாகத்தான் பொருள்.

அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தத் துடிப்பதையும், விவசாயக் கடனை இந்த அளவுக்கு ரத்து செய்திருப்பதையும் பார்க்கும்போது நாடாளுமன்ற பொதுத் தேர்தலைச் சந்திக்க ஆளும் கூட்டணி தயாராகி வருவது நன்றாகவே புலனாகிறது. இந்த விவசாயக் கடன் ரத்து குறித்து நிறையப் பேர் எழுதியும் பேசியும் கருத்து தெரிவித்துவிட்டார்கள்.

கடந்த 60 ஆண்டுகளாக விவசாயத் துறையின் தேவைகளைப் புறக்கணித்து வந்ததன் விளைவுதான் இன்று நாம் காணும் சிக்கல்கள். தொழில்துறையையும், சேவைத்துறையையும் அக்கறையாக கவனித்த அரசாங்கம், விவசாயத்துறையைக் கவனிக்கும் பொறுப்பை ஏழை விவசாயிகளிடமே விட்டுவிட்டது. வேளாண் விளைபொருள்களுக்கான கொள்முதல் விலை சிறிதுசிறிதாக மட்டுமே உயர்ந்துவந்த வேளையில், சாகுபடிக்குத் தேவைப்படும் இடுபொருள்களின் விலை மட்டும் பலமடங்காக உயர்ந்தது. விளைவு, விவசாயத்துறையில் பொருளாதார ரீதியாக இழப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. இது பெரிய பண்ணையத்துக்கும் குறு விவசாயத்துக்கும் இடையிலான போராட்டம் அல்ல; பெரிய பண்ணையாக இருந்தாலும் துண்டு நிலமாக இருந்தாலும் விவசாயத்தில் உற்பத்தித்திறன் மிகக் குறைவாக இருப்பதே பொது அம்சமாகத் திகழ்கிறது.

கடன் தள்ளுபடி அறிவிப்பை வரவேற்கும் பலரும் எச்சரிக்கையாகவே கருத்து தெரிவித்துள்ளனர். இது கடலில் கரைத்த பெருங்காயத்தைப் போலத்தான். வேறு பல பெரிய கொள்கை முடிவுகளையும் அரசு ஒருசேர எடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு பிரச்னை தோன்றினால், அதை நோக்கி பணத்தை வீசி எறிந்தால் அது மறைந்துவிடும் என்ற வழக்கமான அணுகுமுறைப்படியே இந்தப் பிரச்னையும் கையாளப்பட்டிருக்கிறது. பணம் மட்டும் பிரச்னைகளைத் தீர்த்துவிடாது. அரசு தரும் பண உதவி, யாருக்குத் தேவையோ அவர்களை நேரடியாகச் சென்று சேர வேண்டும்.

2 ஹெக்டேருக்கும் குறைந்த அளவு நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மிகவும் ஏழைகள், படிப்பறிவு குறைவானவர்கள். அவர்கள் கந்துவட்டிக்காரர்களின் பிடியில் சிக்கியுள்ளனர். அரசு அறிவித்த உதவி எந்த அளவுக்கு அவர்களைச் சென்று சேரும், இடைத்தரகர்கள் எவ்வளவைத் தங்களுக்கு எடுத்துக் கொள்வார்கள் என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள்.

கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 70% பேர், செüகார்கள் என்று அழைக்கப்படும் லேவா-தேவிக்காரர்களிடம் கடன் வாங்குகிறவர்கள். அரசுடைமை வங்கிகளிடமோ, கூட்டுறவு வங்கிகளிடமோ அவர்கள் கடன் பெறுவதில்லை. கிராமங்களில் நமது வங்கிகள் செயல்படத் தொடங்கி 60 ஆண்டுகள் ஆனபிறகும், ஏழை விவசாயிகளால் வட்டிக்கடைக்காரர்களின் செல்வாக்கிலிருந்து மீள முடியவில்லை என்பது நம்முடைய ஆட்சித்திறத்துக்கு நல்ல உரைகல்.

இதை நிதியமைச்சரிடம் சுட்டிக்காட்டி கேட்டபோது, ""அதற்கு நான் என்ன செய்யட்டும்?'' என்று தோளைக் குலுக்கிக் கேட்டிருக்கிறார். நாட்டின் நிதியமைச்சர் இப்படி பதில் சொல்லியிருப்பது தரமல்ல. சிறந்த பொருளாதார அறிஞரும், தேர்ந்த நிர்வாகியும், முன்னணி அரசியல் தலைவருமான சிதம்பரம், நமது தேசியப் பிரச்னைகள் குறித்து ஆழமாகவும் வலுவாகவும் நல்ல கருத்துகளைக் கொண்டவர். வங்கிகளின் சேவை, குறு விவசாயிகளைச் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.

எது எப்படியோ, நான் வலியுறுத்த வேண்டிய விஷயம் என்னவென்றால் இந் நாட்டின் நிர்வாகத்துறை, நாடாளுமன்றத்துக்குத் தர வேண்டிய மரியாதையைச் செலுத்தத் தவறிவிட்டது என்பதுதான். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்ளும் முறையால் அது மரியாதைக்குரியதா, இல்லையா என்ற வாதம் எல்லாம் தனி.

மிக முக்கியமான வெளிநாட்டு ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கு அல்லது இறுதி செய்வதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் கருத்தை அறிவது அவசியம். சர்வதேச ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் இல்லை என்ற அரசியல் சட்டச் சலுகையை உதாரணமாகக் கொள்ளக்கூடாது. கடந்த காலங்களில் ஜனநாயகத்துக்கு நாம் மிகுந்த அவமரியாதை செய்துவிட்டோம்; இப்போதும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்துவிட்டு இந்த ஒப்பந்தத்தை அமல் செய்வோமேயானால், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நாம் உதட்டளவில் மட்டுமே ஆதரவு தெரிவிக்கிறோம் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் பட்டியலில் சேரும்.

[நன்றி:தினமணி]

said...

5. 2008_09_ம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கையின் முக்கிய அதிலும் குறிப்பாக பணம் பற்றிய சாராம்சங்கள் என்ன?
-- சோம. வள்ளியப்பன் பாகம்[நன்றி: குமுதம்: பணமே ஓடி வா : சோம. வள்ளியப்பன் பாகம் - 17 ]

said...

6. கல்கி தலையங்கம்: தும்பை விடுத்து வாலைப் பிடிக்கும் சிதம்பரம்!

விவசாயக் கடன் தள்ளுபடி என்பது இந்த நாட்டிலோ அல்லது அதன் பட்ஜெட்டிலோ ஒரு புதிய விஷயம் அல்ல. ஆனால், 60,000 கோடி ரூபாய் தள்ளுபடி என்பது வரலாறு காணாதது; துணிச்சல் மிக்கது. இவ்வளவு பெரிய தொகைக்கு எந்த ஒரு முடிவு எடுக்கப் பட்டாலும், ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே எடுக்கப்பட வேண்டும். நிதியமைச்சர், அவ்வாறு செய்ததாகத் தொ¢யவில்லை. தேர்தல் வருகிறது என்கிற ஒரே சிந்தனையில் எடுக்கப்பட்ட முடிவாக அது அமைந்திருக்கிறது. அந்த 60,000 கோடியை வங்கிகளுக்கு அரசு எவ்வாறு ஈடு செய்யும் என்பது குறித்த, ஒரு திடமான திட்டம்கூட இல்லை. இந்தத் தள்ளுபடியினால் விவசாயிகளுக்குக்கூட முழுப் பயன் இருக்குமா என்பதும் சந்தேகம்தான். ஏனெனில், பெரும்பாலான சிறு, குறு விவசாயிகள் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிவிட்டுத்தான் அவஸ்தைப்படுகிறார்களேயொழிய, வங்கிக்கடன் சுமையால் யாருமே வாடி, வதங்கித் தற்கொலைக்கு முயற்சி செய்வதில்லை. சொல்லப் போனால், விவசாயக் கடன்களைத் திரும்ப வசூலிப்பதென்பது வங்கிகளுக்குத்தான் எப்போதுமே சவாலாக இருந்திருக்கிறது. சிதம்பரத்தின் 60,000 கோடி தள்ளுபடி காரணமாக, அதிக ஆதாயம் பெறப்போவது கடன்கொடுத்த வங்கிகள்தான். எந்த முயற்சியும் செய்யாமலே, கொடுத்த பணம் காலப்போக்கில் அரசு மூலமாக அவர்களிடம் திரும்பி வந்துவிடும். இந்தப் பெருஞ்சுமையை, வா¢ செலுத்தும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்தான் எதிர்காலத்தில் தாங்கப்போகிறான்.

பட்ஜெட்டில் இறுதி நிதிப் பற்றாக்குறை 1,33,287 கோடி ரூபாய் என்கிற கொடுமையான உண்மையைக்கூட மறக்கடித்துவிட்டு, 60,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடிதான் முந்தி நிற்கிறது. யதார்த்தத்தில் பார்த்தால், கடன் தள்ளுபடித் தொகையும்கூட பற்றாக்குறைதான். ஆகவே, மொத்த நிதிப் பற்றாக்குறை என்பது 1,33,287 கோடி + 60,000 கோடி - அதாவது, கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை!

இதை ஈடு செய்ய, அரசுக்கு நோட்டு அச்சடிப்பது அல்லது மேலும் வா¢ வசூலிப்பது தவிர வேறு மார்க்கமே இல்லை!

இந்தச் சூழலில், ஒன்பது சதவிகித அல்லது 8.6 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைகிறோம் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமே இல்லை. விலைவாசிகள் உயரவே செய்யும். உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும்பணக்காரர்கள், தங்கள் உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தி எந்த நிலைமையையும் சமாளித்துக்கொள்வார்கள். அமைப்பு ¡£தியாக ஒருங்கிணைக் கப்பட்ட மாதச் சம்பளக்காரர்கள், அகவிலைப்படி உயர்வதால் சுதா¡¢த்துக்கொள்வார்கள். −ப்பி¡¢வுகளுள் அடங்காத ஏழை - எளியோர்தான் விலைவாசி உயர்வால் மிகவும் வாடி வதங்குவர். நடுத்தர வர்க்கத்தினர் திணுறுவார்கள்.

கடன் சுமை நீங்கப் பெற்ற விவசாயிகள், இன்னும் சில மாதங்களுக்கு அந்த நிகழ்வைக் கொண்டாடக்கூடும். அதற்குள் பருவமழை மீண்டும் பொய்த்தாலோ அல்லது அளவுக்கு மீறி பெய்தாலோ, மீண்டும் அவர்களுடைய சோக சகாப்தம் தொடங்கிவிடும். திறம்பட தீட்டிய விவசாயக் கொள்கையும் அதையொட்டிய தீவிர வழிகாட்டலும் இல்லாத நிலையில், கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு உதவாது. விவசாயம் பொய்க்கிற காலத்தில் அவர்களுக்கு மாற்றுப் பணி வேண்டும். மாறி வரும் பருவச் சூழல், காலச் சூழல், சந்தைச் சூழல் ஆகிய மூன்றையும் எதிர்கொண்டு, விஞ்ஞான ¡£தியாக தொழில் அணுகுமுறையை அவ்வப்போது சீரமைத்துக்கொள்ள, விவசாயிகளுக்கு இடையறாத உதவியும் அறிவுறுத்தலும் தேவை.

இவையெதுவுமின்றி 60,000 கோடியை மட்டும் ரத்து செய்வது என்பது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதைதான்! இதை நாம் மட்டும் சொல்லவில்லை; நிதியமைச்சா¢ன் நெருங்கிய உறவினரேகூட சுட்டிக்காட்டியிருக்கிறார்!

[நன்றி: கல்கி]

said...

அட...!!

~~~~~~
சென்னை மாநகராட்சியின் 2008- 09ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதிக்குழு (வரி விதிப்பு மற்றும் நிதி) தலைவர் ராதா சம்மந்தன் புதனன்று தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் சென்னை மாநகராட்சி மக்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ- மாணவியருக்கு லேப்-டாப் பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மற்ற சலுகைகள்:

* 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு ரூ.1,000மும், பிளஸ் 2 தேர்வில் 1000-க்கும் மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு ரூ. 1,000மும், பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு தலா ரூ.500-ம் பரிசு வழங்கப்படும்.

* மயானங்களில் உடல் தகனம் அல்லது அடக்கம் செய்வதற்கு இனி கட்டணம் கிடையாது. இலவசமாக செய்யப்படும்.

* ஏழை, எளிய மக்கள் இலவசமாக குளிர்சாதன அமரர் பெட்டி கிடைக்கும் வகையில் 30 மின் குளிர் சாதன அமரர் பெட்டிகள் வாங்கப்படும்.

* சென்னை நரின் உள்ள தங்கசாலை சந்திப்பு, வியாசர்பாடியில் உள்ள கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை, திருவான்மியூர் எல்.பி.சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும்.

* சென்னை கிரீம்ஸ் சாலை அருகே உள்ள வாலஸ் தோட்டம், பிராட்வே பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.

நன்றி:தமிழ்நெஞ்சம்
(உங்களுக்கேவா...?!)
~~~~~~~~

said...

புலிகளின் தாயகமான இந்தியக் காடுகளி லேயே இப்போது 1,500க்கும் குறைவான புலிகள்தான் இருக்கின்றன. 2002ல் இந்தியா முழுவதும் 3,642 புலிகள் இருந்தன. ஆனால், இப்போது 1,411 புலிகள் மட்டுமே உள்ளன என்று சமீபத்திய கணக் கெடுப்பில் தெரியவந்துள்ளது. சில வருடங் களுக்கு முன்பு வரை உலகம் முழுவதிலும் 40,000ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை சடசடவெனக் குறைந்து, இப்போது வெறும் 3,000 ஆகிவிட்டது.


''உலகம் முழுக்கப் புலிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் தமிழகத்தில் மட்டும் புலிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்துள்ளது. நியாயமாக இதற்குப் பிரமாதமான ஒரு விழா எடுத்துக் கொண்டாட வேண்டும் நாம்!'' என்கிறார் 'களக்காடுமுண்டந் துறை புலிகள் காப்பக'த் துணை இயக்குநர் பத்ரசாமி.

நன்றி; ஆனந்த விகடன்

said...

கல்கி தலையங்கம்: ஊதிய கமிஷனும் ஊதா¡¢ச் செலவுகளும்!
[ஏப்ரல் 6, 2008]

நல்லெண்ணெய் விலை கடந்த நான்கே மாதங்களில் நூறு சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருப்பது மட்டுமல்ல, அத்தியா வசியப் பொருட்கள் பெரும்பாலானவை கிடுகிடுவென விலை உயர்வு கண்டுள்ளன. −தனை அனைவரும் ஒப்புக்கொண்டு, காரணங்களை ஆராய்ந்து வரும் வேளையில், மத்திய அரசு செய்துள்ள கா¡¢யம் தரக்குறைவான எண்ணெய்போல் கசப்பூட்டுகிறது!

2008-09க்கான பட்ஜெட்டில் ரூ.1,33,287 கோடி நிதிப் பற்றாக் குறை காட்டப்பட்டிருப்பது நம் எல்லோருக்கும் தொ¢யும். ஆனால், பற்றாக்குறையை நேர்மையாகக் கணக்கிட்டு உண்மையைக் கூறா மல், சில முக்கியமான செலவுகளை மறைத்தும் மழுப்பியும் பற்றாக் குறை தொகையைக் குறைத்துக் காட்டியிருக்கிறது பட்ஜெட்
அறிக்கை. −ந்த அதிர்ச்சி தரும் உண்மையைப் பொருளாதார
ஆய் வாளர்கள், வல்லுனர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

உதாரணமாக, பெட்ரோலியப் பொருட்கள், உணவு, −ரசாயன உரம் போன்றவற்றுக்கான மானியத் தொகையைச் செலவு கணக்கில் கொண்டுவராமல், அத்தொகைக்குப் புதிய கடன் பத்திரங்கள் வழங்கி நிதி சேர்க்க முற்பட்டுள்ளார் நிதியமைச்சர். −ந்தப் பத்திரங்களுக்கான வட்டியும் அசலும் திருப்பித்தரப்படவேண்டிய கடன் செலவுகள் தானே! −வ்வுண்மை மறைக்கப்படாவிட்டாலும் மழுப்பப்பட்டி ருக்கிறது.

−துபோன்ற மழுப்பி மெழுகப்பட்ட செலவுகளே ஒரு லட்சம் கோடிக்கு −ருக்கும் என்பது நிபுணர்களின் மதிப்பீடு.

9,996 கோடி ரூபாய்க்கு ஸ்டேட் பாங்க் ஆ·ப் −ந்தியா சிறப்புப் பங்குகளை வாங்கும் உ¡¢மையை மத்திய அரசு பெற்றிருந்தபோதிலும், வாங்குவதற்கு அதனிடம் பணமில்லை. ஆகவே, அதற்கும் கடன்
பத்திரங்கள் வழங்கி, அதை மக்களிடம் விற்றுக்கொள்ளுமாறு
கூறிவிட்டது அரசு! −ந்தத் தொகையும் அதற்கான வட்டியும் பட்ஜெட்டில் செலவு கணக்கில் காட்டப்படவில்லை.

−வற்றையெல்லாம்விட அநீதி, ஆறாவது ஊதிய கமிஷனின் அறிக்கை வரவிருப்பது தொ¢ந்தும், அதனால் ஏற்படக்கூடிய கூடுதல் செலவுக்கு நிதியமைச்சர் நயா பைசா ஒதுக்கவில்லை என்பதே! விவசாயக் கடன் தள்ளுபடி போலவே −ந்தச் செலவும் எவ்வாறு சமாளிக்கப்படும் என்பது பற்றி எந்தச் சிந்தனையும் −ல்லை. ஆறாவது ஊதிய கமிஷனுடைய பா¢ந்துரைகளால் அரசுக்கு (பழைய பாக்கிக்கான) உடனடி கூடுதல் செலவு 18,060 கோடி என்பதோடு, ஆண்டுதோறும் 12,561 கோடி ரூபாய் கூடுதல் செலவு தொடரும்! விலைவாசி உயர்வைச் சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படுவது நியாயமே. ஆனால், அந்தச் செலவுக்கு அரசு திட்டமிடாததை ஏற்கவும் முடியாது; பட்ஜெட்டில் சேர்க்காததை மன்னிக்கவும் முடியாது!

நிகர விளைவாக, −ந்த ஊதிய கமிஷன் பா¢ந்துரைகள் அமலாகும்போது, நல்லெண்ணெய் விலை மேலும் நூறு சதம் உயர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில், நாற்பது லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் அதன் நிழல் தொடர்ச்சியாகப் பல்வேறு மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் கிறுகிறுவென்று உயர்கிறபோது, பணப்புழக்கமும் விறுவிறு வென்று அதிகா¢க்கும். அதற்கேற்ப உற்பத்திப் பெருக்கம் நாட்டில் −ல்லாததால் விலைவாசி மீண்டும் உயரவே செய்யும்! −ந்த விஷ வட்டத்திலிருந்து விடுபட, வேலை வாய்ப்பையும் உற்பத்தியையும் பெருக்கும் திட்டச் செலவினங்களை அதிகா¢த்து, கிராமப்புறங்களைத் தன்னிறைவு நோக்கி திசை திருப்பி, வருவாய் தராத செலவுகளைக் குறைப்பது ஒன்றே வழி. அரசின் விண்ணளாவிய டம்பாச்சா¡¢ செலவினங்களை அதிரடியாகக் குறைக்க வேண்டும். −தைச் செய்யும் துணிவு என்றைக்கு −ந்திய நிதியமைச்சருக்கு ஏற்படுகிறதோ, அன்றுதான் −ந்தியப் பொருளாதாரத்துக்கு விடிவுகாலம்!