செவ்வாயன்று (மார்ச் 11, 2008) முடிவடைந்த அமெரிக்க சந்தை யாரும் எதிர்பாரதது. அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை எப்படி சமாளிப்பது என்று ரொம்பவே திணறிதான் போயுள்ளது அமெரிக்க பெஃடரல்.
வங்கிகளுக்கு 200 பில்லியன் அமெரிக்க வெள்ளிகளை (கடனாக) பட்டுவாடா செய்யபோவதாக வந்த பெஃடரலின் அறிவிப்பையொட்டி அமெரிக்க பங்கு சந்தை (DOW) 417 புள்ளிகள் மேலே சென்று 12,157ல் இருக்கிறது. அமெரிக்க பங்கு சந்தை வரலாற்றில் இது நான்காவது மிகப் பெரிய உயர்வு.
சூலை 2002 ஆண்டிற்குபின் நேற்றுதான் இதுபோல் நடந்துள்ளது.
NASDAQ 87 புள்ளிகள் மேலே சென்று 2,256ல் தாக்கு பிடித்துள்ளது.
இந்த 200 பில்லியன் அமெரிக்க வெள்ளிகள் 20 நிறுவனங்களுக்கு (வங்கிகள் & நிதி நிறுவனங்கள்) 28 நாட்கள் termல் தருவதாக அறிவித்துள்ளது.
இதன் தாக்கம் இன்று நமது சந்தைகளில் எதிரொலிக்குமா?
கொசுறு:
நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை $ 109.72 வரை சென்று, தற்பொழுது $108.75ல் முடிந்துள்ளது. கடந்த ஆறு வர்த்தக நாளில் மட்டும் கச்சா எண்ணெய் விலை ஐந்தாவது தடவையாக உயர்ந்திருக்கிறது. ஜனவரியில் பேரல் ஒன்றிற்கு 87 அமெரிக்க வெள்ளிகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஜி.டி.பி வளர்ச்சி புள்ளிவிபரத்தில் குளறுபடி - அம்பலப்படுத்தும்
அரவிந்த் சுப்பிரமணியன்
-
இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரங்கள் தவறு என்று நிறுவும்
ஆய்வுக் கட்டுர...
5 years ago
0 comments:
Post a Comment