Showing posts with label கச்சா எண்ணெய். Show all posts
Showing posts with label கச்சா எண்ணெய். Show all posts

Monday, September 22, 2008

கச்சா எண்ணெய் - வரலாறு காணதளவு உயர்வு

கச்சா எண்ணெய் விலை வரலாறு காணதளவு ஒரே நாளில் $16.27 (16 %) விலை கூடி, $120.92 யில் முடிவடைந்துள்ளது.

 
 

நன்றி: CNBC

Thursday, September 11, 2008

கச்சா எண்ணெய் -- செப்டம்பர் 11, 2008

சூலை முதல் வாரத்தில் பீப்பாய்க்கு $ 147 ஆக இருந்த கச்சா எண்ணெய் விலை இன்று $100.10 வரை குறைந்து நாளின் முடிவில் $ 100.87ல் இருக்கிறது. அமெரிக்க வெள்ளியின் பலம் கூடியுள்ளது. Hurricane Ike (தமிழ் ?) மெதுவாக மிரட்ட ஆரம்பித்து இருக்கிறது.

100 அமெரிக்க வெள்ளிக்கும் கீழ போன இன்னும் 15 - 20 வரை விலை குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்களின் கணிப்பு. இதற்கிடையில் OPEC [Organization of the Petroleum Exporting Countries ] கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது. ஒரு நாளைக்கு 270,000 பீப்பாய்கள் உற்பத்தியாவதாக ஒரு கணக்கு சொல்லுகிறது.

Hurricane Ike [Category 2 storm]னால் Gulf of Mexico மற்றும் Galveston Bay யிலுள்ள   எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இது போல பாதிப்புகளினால், இது வரை (2008) 15 மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தி முடக்கப் பட்டது. இது அமெரிக்க தேவையில் மூன்றில் ஒரு பகுதி!!

* 1 barrel = 159 Liters

தொடர்புள்ள சுட்டி:

http://money.cnn.com/2008/09/11/markets/oil/?postversion=2008091110

Friday, July 18, 2008

பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

கச்சா எண்ணெய் பேரலுக்கு $129 க்கு கீழ வந்துள்ளது. இது போன வாரத்தைவிட 13% சரிவு! ஒரே வாரத்தில $15 குறைஞ்சிருக்கு. அதுவும் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் (இஸ்ரேல்..?) இருக்கும் 'tension' அதிகமாயிருக்கும் நேரத்தில்...




'தீடீரென' சீனாவும், இந்தியாவும் தன்னுடைய தேவையை குறைச்சதானலதான் இந்த விலை குறைவுக்கு காரணம்னு ஒரு செய்தி!

அதலாம் சரி.. பெட்ரோல் பஃங்கில எப்ப விலை குறையும்...?

கச்சா எண்ணெய் ரிபைனரிக்கு போய் அங்கிருந்து அது பெட்ரோல் மற்றும் இதர பொருட்களா பிரிச்சி அப்புறம் அங்கிருந்து பெட்ரோல் பஃங்குக்கு வரணும். எப்படியும் 2-3 வாரமாவது ஆகாது..?

Thursday, March 13, 2008

யுரோ, யென், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் ...

எதுவும் சொல்லிகிறமாதிரி இல்ல...

உலக சந்தை எல்லாவற்றிக்கும் நேற்று பங்கு சந்தையில் பெரிய சரிவு என்றாலும்.... நமக்கு கொஞ்சம் பெரிய அடிதான்.

மும்பை பங்கு சந்தையில் 777.29 புள்ளிகள் குறைந்து 15,350.69 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தை 246.65 புள்ளிகள் குறைந்து 4,625.35 புள்ளிகளில் முடிந்துள்ளது.

யுரோவுக்கு எதிரான அமெரிக்க வெள்ளியின் மதிப்பு குறைந்துள்ளது. 1 யுரோ = $ 1.56.

12 வருடங்களுக்கு பின் யென் க்கு எதிரான அமெரிக்க வெள்ளியின் மதிப்பு(ம்) 99.75 யென் ஆக குறைந்து சந்தையின் முடிவில் ஒரு அமெரிக்க வெள்ளிக்கு 100.57 யென்னில் இருக்கிறது. ஜப்பான் பொருளாதரத்தை இது மேலும் பாதிக்கலாம்...

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு $ 110 யை தாண்டியுள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (முதல் முறையாக) 1001 அமெரிக்க வெள்ளி என்ற புதிய சாதனையை தொட்டுவிட்டு(!), நாளின் இறுதியில் 997.10யில் இருக்கிறது. இன்னும் முதல் காலண்டு முடிவாகத நிலையில் .... இந்த வருடத்தில் மட்டும் 20% அதிகரித்துள்ளது.


இரண்டு நாட்களுக்கு முன் தினமலரில் வந்த செய்தி:

திருநெல்வேலி : ஆன்லைன் மூலம் செய்யப்படும் தங்க வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் நேற்று 500க்கும் நகைப்பட்டறைகள், நகைக்கடைகள் அடைக்கப்பட்டன. தற்போது இன்டர்நெட் மூலமாக ஆன்லைனில் தங்க நகை வியாபாரம் நடந்து வருகிறது. தங்க விலை நிலையாக இல்லாமல் அதிகரித்தும், குறைந்தும் வருவதால் தங்க நகை செய்வோர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். தங்கள் தொழிலுக்கு பாதுகாப்பு தரும் விதமாக ஆன்லைன் மூலமாக செய்யப்படும் தங்க நகை வியாபாரத்திற்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி நெல்லை கூலக்கடை பஜாரில் நேற்று 500க்கும் மேற்பட்ட தங்க நகை செய்யும் பட்டறைகளும், கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அது குறித்து எம்.எல்.ஏ., க்கள், எம்.பி.,க் கள்,அமைச்சர்கள் மூலமாக மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்த முடிவு செய்துள்ள நகை பட்டறை உரிமையாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடு படப்போவதாக தெரிவித்துள்ளனர்.


ம்ம்ம்..... அமெரிக்க வெள்ளியின் மதிப்பு மேலும் குறைய அதிகம் வாய்ப்புகள் இருப்பதாகவே தென்படுகிறது.