- சந்தையில் பொறுமை காக்க வேண்டிய நேரம் இது.
- பங்குச் சந்தை என்பது முதலீடு செய்யும் இடம்; சூதாட்டம் அல்ல.
- கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சிறப்பான முறையில் முதலீடு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்;
- முதலீடு என்பது கலை; அதை நிறையப் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
@
- பியூச்சர் கேபிடல், ரிலையன்ஸ் பவர் அப்ளிகேஷன் போட எல்லா இடங்களிலும் பெரிய வரிசைகளில் மக்கள் நின்று கொண்டிருந்தனர்.
- 1993ல் மோர்கன் ஸ்டான்லி கம்பெனி மியூச்சுவல் பண்டு துவங்கிய போது அவர்களின் முதல் வெளியீட்டிற்கு மக்கள் இரண்டு கி.மீ., தூர வரிசையில் நின்று அப்ளிகேஷன் போட்டனர். அதன் பிறகு அதுபோல பெரிய ஒரு அலை இப்போது தான் அடிக்கிறது.
- சென்ற வாரத்தில் மட்டும் 2,00,000க்கும் மேற்பட்ட டிமேட் அக்கவுண்டுகள் ஓபன் செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இது பங்குச் சந்தையில் உள்ள ஆர்வத்தை காட்டுகிறதா? அல்லது பங்குச் சந்தையின் மீது மக்களுக்கு திடீரென ஏற்பட்டுள்ள மோகத்தை காட்டுகிறது. ஆசை 60 நாள், மோகம் 30 நாள்.
@
- எம்மார் எம்.ஜி.எப்., கட்டுமானத் துறை கம்பெனியின் வெளியீடு பிப்ரவரி 4ம் தேதி துவங்கி 7ம் தேதி வரை முடிவடைகிறது. இது உலகத்தின் பெரிய கட்டுமானத் துறை கம்பெனிகளில் ஒன்று. ரூபாய் 725 முதல் ரூ.850 வரை விலை.
@
- இந்தியாவில் கம்பெனிகள் நன்கு செயல்பட்டாலும் பல நாடுகளின் பங்குச் சந்தைகள் இன்னும் அமெரிக்காவின் போக்கை வைத்து தான் உள்ளன.
- இதுவரை வந்துள்ள காலாண்டு முடிவுகள் நன்றாகவே உள்ளது. ஆகவே, அடிப்படைகளில் சந்தேகம் இல்லை. சந்தை மறுபடி வீறு கொண்டு எழும்.
[நன்றி:தினமலர் வர்த்தகம்]
1 comments:
//
சந்தையில் பொறுமை காக்க வேண்டிய நேரம் இது
//
சரியா சொன்னிங்க.
வலைச்சரதுல பிசி
நானே ஒரு பதிவு போடனும்னு நெனைச்சுகிட்டிருந்தேன்.
Post a Comment