Showing posts with label தினமலர். Show all posts
Showing posts with label தினமலர். Show all posts

Thursday, September 18, 2008

வணிகச் செய்திகள் - செப்டம்பர் 19, 2008

இந்திய வங்கிகளுக்கு பாதிப்பில்லை: ப. சிதம்பரம்

வியாழக்கிழமை காலை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் 705 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன. இந்நிலையில் இந்திய வங்கிகளின் நிதி நிலை நன்றாக உள்ளது என்றும், எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் சிதம்பரம் கூறினார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

இதையடுத்து பங்குச் சந்தை சரிவிலிருந்து மீண்டது. வங்கிகளின் பங்கு விலைகளும் அதிகரித்தன.

இங்குள்ள டாடா-ஏஐஜி கூட்டு காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள காப்பீடுதாரர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசிடம் உறுதி அளித்துள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள வங்கிகள் நிதி நெருக்கடிக்கு உள்ளானதால் பாதிக்கப்படும் அளவுக்கு இந்தியாவில் உள்ள வங்கிகள் இல்லை.

இங்குள்ள பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகின்றன. இங்குள்ள ஐசிஐசிஐ வங்கியும் ஆர்பிஐ விதிமுறைகளுக்குள்பட்டுதான் செயல்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள வங்கிகளுக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக இங்குள்ள வங்கிகளில் மேற்கொள்ள உள்ள நிதிச் சீரமைப்பு நடவடிக்கைகள் ஒருபோதும் நிறுத்தி வைக்கப்பட மாட்டாது என்று அவர் மேலும் கூறினார்.

அவரது அறிக்கை வெளியான பின்பு பங்கு சந்தை, காலையில் இழந்த புள்ளிகள் மீட்க ஆரம்பித்தது. மும்பை பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 52.70 புள்ளிகள் ( 0.4 சதவீதம் ) உயர்ந்து 13,315.60 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 29.90 புள்ளிகள் ( 0.75 சதவீதம் ) உயர்ந்து 4,038.15 புள்ளிகளில் முடிந்தது.

~~~

10 கிராம் தங்கத்தின் விலை ரூ.12,915 !!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி சிக்கலை தொடர்ந்து சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக , உலக அளவில் இன்று பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை விட்டுவிட்டு தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். எனவேதான் தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதாக சொல்கிறார்கள்.இன்றைய காலை வர்த்தகத்தில் பார் தங்கமும் ஆபரண தங்கமும் 10 கிராமுக்கு ரூ.1000 உயர்ந்து முறையே ரூ.12,915 ஆகவும் ரூ.12,765 ஆகவும் இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸூக்கு 870 டாலராக இருக்கிறது.

1980க்குப்பின் இப்போது மீண்டும் சர்வதேச அளவில் ஒரு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து மக்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தையே கருதுவதால் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். எனவேதான் இந்தளவு விலை உயர்ந்திருக்கிறது என்கிறார்கள்.
~~

அமெரிக்க நிதித்துறை நெருக்கடியால் எங்களுக்கு பாதிப்பில்லை : சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தகவல்

அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டள்ள தேக்க நிலையால், அமெரிக்காவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தையே பெரிதும் நம்பியிருக்கும் இந்திய ஐ.டி., நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்று முதலில் கணிக்கப்பட்டது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் கூட 4,500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது என்று சொல்லப்பட்டது. இதனை மறுத்த கிருஷ்ணன், ஒரு ஊழியர் கூட இங்கிருந்து வெளியில் செல்லவில்லை என்றார். சத்யம் கம்ப்யூட்டர்ஸில் இப்போது 53,000 ஊழியர்களுக்கு மேல் பணியாற்றுகிறார்கள்.

~~

உலகம் முழுவதும் பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி : இந்தியா இழந்ததை மீண்டது

உலகம் முழுவதும் இன்று காலை பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

ஜப்பானில் கடும் வீழ்ச்சியில் இருந்த பங்கு சந்தையை மீற்க, பேங்க் ஆப் டோக்கியோ கூடுதலாக 14.4 பில்லியன் டாலர்களை நிதி சந்தையில் புழக்கத்திற்கு விட்டிருக்கிறது. டோக்கியோ பங்கு சந்தையில் நிக்கியின் சராசரி 3.2 சதவீதம் சரிந்திருக்கிறது.

தென்கொரிய சந்தையில் இன்டெக்ஸ் 3 சதவீதம் குறைந்திருக்கிறது.

ஆசியா முழுவதும் இந்த வாரத்தில் மட்டும் அந்தந்த நாட்டு ரிசர்வ் வங்கிகளால் மொத்தம் 33 பில்லியன் டாலர்கள் நிதி சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டிருக்கிறது.
ஹாங்காங்கின் ஹேங்செங்க் 5 சதவீதம், தைவானின் வெயிட்டட் 4.5 சதவீதம், ஆஸ்திரேலியாவில் 3.5 சதவீதம் குறைந்திருந்தது.
திவால் நிலைக்கு சென்ற ஏ.ஐ.ஜி. இன்சூரன்ஸ் நிறுவத்திற்கு, 85 பில்லியன் கடன் கொடுத்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி காப்பாற்றினாலும் அங்கும் பங்கு சந்தையில் 4 சதவீத சரிவு ஏற்பட்டது.

ஐரோப்பாவிலும் பெரும் சரிவுதான்.

இதனை தொடர்ந்து இந்திய பங்கு சந்தையும் கடும் பாதிப்பிற்குள்ளானது.

* மும்பை பங்கு சந்தையில் காலை 10.00 மணி அளவில் சென்செக்ஸ் 649 புள்ளிகள் குறைந்து 12,613 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 174 புள்ளிகள் குறைந்து 3,833 புள்ளிகளாக இருந்தது.
* கட்டுமானம், டெலிகாம், டெக்னாலஜி, மெட்டல் மற்றும் பார்மா பங்குகள் படு பாதாளத்திற்கு சென்றன.

* பி எஸ் இ இன் எல்லா இன்டக்ஸூமே சிகப்பில் தான் இருந்தன.
* ஆனால் மத்திய அமைச்சரின் பேச்சு மதியம் வெளியான பின்பு இந்திய பங்கு சந்தை மீண்டும் உயிர் பெற்றது.

~~
அமெரிக்க பாராளுமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க லேமன் பிரதர்ஸ், ஏ.ஐ.ஜி., அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
இந்த இரு நிறுவனங்களும் ஏன் இந்த நிலைக்கு வந்தன என்பது குறித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் ( காங்கிரஸ் ) ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இரு நிறுவனங்களையும் சேர்ந்த இப்போதைய மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளுக்கு ( சி.இ.ஓ., ) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அக்டோபர் 6 ம் தேதி நடக்க இருக்கும் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கம் அளிக்குமாறு லேமன் பிரதர்ஸ் இன் சி.இ.ஓ., ரிச்சர்ட் ஃபுல்க்கும், 7 ம் தேதி நடக்க இருக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கம் அளிக்குமாறு ஏ.ஐ.ஜி., நிறுவனத்தின் சி.இ.ஓ., ராபர்ட் வில்லும்ஸ்டடுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

@@

Tuesday, January 22, 2008

கறுப்பு திங்கள்/செவ்வாய் மற்றும் சில நம்பிக்கைகள்

என்னத்தை சொல்ல......

கொஞ்சம் கொஞ்சமா ... 20 நாள்கள், 30 நாள்கள்னு மேல வந்து புதிய சிகரத்தை தொட்ட நம் பங்குச்சந்தை ஒரே நாளில்... இல்ல.. இல்ல சில மணி நேரங்களில் அதல பாதளத்தில் இருக்கிறது (இதை எழுதும் பொழுது....). 2000 புள்ளிகள் வரை சரிந்திருக்கிறது....[~ 15888]. கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக சேர்ந்து வந்த லாபங்கள் அனைத்தும் ஒரே நாளில் காணாமல் போய்விட்டன...Ground Zero!!

இதற்கு முன்னர் 2006-ம் ஆண்டு மே 18-ம் தேதி ஒரே நாளில் 826 புள்ளிகள் சரிந்ததுதான் மிகப் பெரிய சரிவாகும். அதையும் மிஞ்சி விட்டோம்.

அதேபோன்று முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாள் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பு மட்டும் 6,63,975 கோடி ரூபாயாகும். அதேபோன்று கடந்த வாரத்தில் ஐந்து வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பு 5,21,310 கோடி ரூபாய்!! இதுதான் மரண அடிகிறதோ..?

நேற்று (சனவரி 21) மும்பை பங்குச் சந்தை (Dalal St) மட்டுமில்லாமல், எல்லா பங்கு சந்தையும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. ஜப்பான் 4.4%, ஹாங்காங் 5.5%, பிரிட்டன் 5.5%, பிரான்ஸ் 6.8%,, ஜெர்மனி 7.2%, அமெரிக்கா 3.6%, கனடா, ஆஸ்திரேலியா என நமக்கு தெரிந்த எல்லா பங்கு சந்தைக்கும் பெரிய அடிதான். ஆனால் நமக்குதான் 7 சதவீதம் அளவு விழுந்து ஒரு பெரிய அடியைத் தந்தது. (அதுக்கூட பரவாயில்லை என்று சொல்லக்கூடிய அளவு இன்று, [செவ்வாய்] 15% வரை கீழே போனது)

அமெரிக்க பங்குச்சந்தை சரிவுக்காவது ஏதோ 'நம்பக்கூடிய' நமக்கு புரியக்கூடிய காரணங்களான - ஃபெடரல் வங்கி, டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை மேலும் குறைக்க முடிவு, recession பயம், sub-prime பிரச்சனை... இதையும் தாண்டி "பெரிதான வரவேற்பு பெறாத" புஷ் அறிவித்த 145 பில்லியன் டாலர் வரி விலக்கு திட்டம்னு ஒரு பட்டியல் போடுறாங்க...

ஆனல் நம் பங்குச்சந்தையோ ... அடிப்படை நன்றாக இருக்கிறது, GDPயும் நம்பிக்கை தரும்படியாகவே இருக்கிறது. நம் மன்மோகன் சிங்கும், ப.சியும் அதே நம்பிக்கையை வலியுத்துகிறார்கள். அப்புறம் ஏன் இப்படி ஒரு சரிவு?

உலக பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு அதன் தாக்கம் நம் பங்குச்சந்தையில் எதிரொலிக்கிறதா .. இல்லை .. பயத்தின் காரணமாக சிறு முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை மிக அதிக அளவில் விற்றதன் காரணமாக ....... ஒன்றும் புரியவில்லை.

ஆனால் இவ்வளவு சோகத்திற்கும் பின் சில நம்பிக்கைகள் இருக்கதான் செய்கிறது.... சிறு முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் நுழைய சரியான தருணம்....என்ன "கொஞ்சம்" பொறுமையும், நிதானமும் தேவை..
  • இன்னும் சில நாட்கள் இது போல இருக்கலாம் என்று சில கணிப்புகள்...
  • பங்குச் சந்தைக்குள் வெளிநாட்டு நிறுவனங்களும், மியூச்சுவல் பண்டுகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை சந்தைக்கு மறுபடி வர வாய்ப்புகள்.....


இந்த நேரத்தில் நாம் என்ன செய்யலாம்...அல்லது என்ன கற்றுக் கொள்ளலாம்?

  • அமெரிக்கா பங்குச்சந்தையின் வரலாற்றின் படி பார்த்தால், பொதுவாக காளையின் ஓட்டம் 10-12 ஆண்டுகள் இருக்கும் என்றும், அதன்படி பார்த்தால் நம் பங்குச்சந்தைக்கு இன்னும் 'ஒளிமயமான எதிர்காலம்' இருக்கிறது என்றும் ஒரு சாரரின் கருத்து.
  • சிறிய முதலீட்டாளர்கள் முதலீடு முழுவதும் பங்குச் சந்தையில் போடாமல், எவ்வளவு எடுக்க முடியுமோ அவ்வளவு மட்டும் முதலீடு செய்யலாம்.
  • கம்பெனிகளை நன்கு தெரிந்து முதலீடு செய்யலாம்.
  • நல்ல கம்பெனிகள் கீழே சென்றாலும் மேலே வந்துவிடும். அதனால் அந்த மாதிரியான பங்குகளை தேர்வு செய்யலாம்.
  • அதிக லாபம் கண்ட பங்குகளை சிறிது விற்கலாம்.
  • நல்ல பங்குகள் குறைந்த விலைக்கு கிடைத்தால், சிறிது அளவில் வாங்கலாம்.

வாழ்க்கையே நம்பிக்கைலதான இருக்குது ! நம்புவோம்!!

Thursday, January 17, 2008

பொறுமை காக்கும் நேரம்

  • சந்தையில் பொறுமை காக்க வேண்டிய நேரம் இது.
  • பங்குச் சந்தை என்பது முதலீடு செய்யும் இடம்; சூதாட்டம் அல்ல.
  • கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சிறப்பான முறையில் முதலீடு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்;
  • முதலீடு என்பது கலை; அதை நிறையப் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.

@

  • பியூச்சர் கேபிடல், ரிலையன்ஸ் பவர் அப்ளிகேஷன் போட எல்லா இடங்களிலும் பெரிய வரிசைகளில் மக்கள் நின்று கொண்டிருந்தனர்.
  • 1993ல் மோர்கன் ஸ்டான்லி கம்பெனி மியூச்சுவல் பண்டு துவங்கிய போது அவர்களின் முதல் வெளியீட்டிற்கு மக்கள் இரண்டு கி.மீ., தூர வரிசையில் நின்று அப்ளிகேஷன் போட்டனர். அதன் பிறகு அதுபோல பெரிய ஒரு அலை இப்போது தான் அடிக்கிறது.
  • சென்ற வாரத்தில் மட்டும் 2,00,000க்கும் மேற்பட்ட டிமேட் அக்கவுண்டுகள் ஓபன் செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இது பங்குச் சந்தையில் உள்ள ஆர்வத்தை காட்டுகிறதா? அல்லது பங்குச் சந்தையின் மீது மக்களுக்கு திடீரென ஏற்பட்டுள்ள மோகத்தை காட்டுகிறது. ஆசை 60 நாள், மோகம் 30 நாள்.

@

  • எம்மார் எம்.ஜி.எப்., கட்டுமானத் துறை கம்பெனியின் வெளியீடு பிப்ரவரி 4ம் தேதி துவங்கி 7ம் தேதி வரை முடிவடைகிறது. இது உலகத்தின் பெரிய கட்டுமானத் துறை கம்பெனிகளில் ஒன்று. ரூபாய் 725 முதல் ரூ.850 வரை விலை.

@

  • இந்தியாவில் கம்பெனிகள் நன்கு செயல்பட்டாலும் பல நாடுகளின் பங்குச் சந்தைகள் இன்னும் அமெரிக்காவின் போக்கை வைத்து தான் உள்ளன.

  • இதுவரை வந்துள்ள காலாண்டு முடிவுகள் நன்றாகவே உள்ளது. ஆகவே, அடிப்படைகளில் சந்தேகம் இல்லை. சந்தை மறுபடி வீறு கொண்டு எழும்.

[நன்றி:தினமலர் வர்த்தகம்]