Friday, November 30, 2007

பிசினஸ்மென் ஆஃப் தி இயர்(2007) -- இன்ஃபோசிஸ் -- நிர்மா

இந்தியருக்கு 'பிசினஸ்மென் ஆஃப் தி இயர்' (2007) விருது

ஆசிய அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஐசிஐசிஐ வங்கி (இந்தியா) தலைமை நிர்வாகி கே.வி.காமத்-க்கு, பிசினஸ்மென் ஆஃப் தி இயர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு முதல் காமத் மேற்கொண்ட நடவடிக்கைகளால், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு 31 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஆசியாவின் முதல் 10 வங்கிகள் பட்டியலிலும் ஐசிஐசிஐ இடம் பெற்றுள்ளது.

இந்தியாவின் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச அளவிலான பணப்பரிமாற்ற திட்டத்தை காமத் அறிமுகப்படுத்தியது பாராட்டத்தக்கது என்றும், இந்த நடவடிக்கையால் ஐசிஐசிஐ வங்கியும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், போர்ப்ஸ் ஆசியா பத்திரிகையின் ஆசிரியர் டிம் பெர்குசன் தெரிவித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் ஆசியா சார்பில் வழங்கப்படும் இந்த விருதுக்கு கடந்த 2006ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தின் நந்தன் நிலெகானியும், கடந்த 2004ம் ஆண்டு ரத்தன் டாடாவும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

~~~~~~

பிஎஸ்சி ஹால் ஆஃப் ஃபேமில் இன்ஃபோசிஸ்

பேலன்ஸ்டு ஸ்கோர்கார்டு (பி.எஸ்.சி) [Balanced Score Card] என்பதை பயன்படுத்தி நிறுவன நடவடிக்கைகள் திறனை மேம்படுத்தி சாதனை படைத்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்த இன்போசிஸ் நிறுவனத்திற்கு பிஎஸ்சி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) விருது பெற்றுள்ளது.

பல்லாடியம் குழுமம் [Palladium Group] வழங்கப்பட்டுள்ள இந்த விருதை, யு.பி.எஸ்[UPS], பெஸ்ட் பை[Best Buy], சீமென்ஸ்[Siemens], மோடரோலா[Motorola], ஏடி அண்டு டி கனடா (AT&T Canada) ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன.

இந்த வரிசையில் தற்போது தகவல் தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான இன்போசிஸ் சேர்ந்துள்ளது குறித்து அந்த நிறுவனத்தின் மூத்த தலைவர் சஞ்சய் புரோஹித் மகிழ்ச்சி தெரிவித்தார். நிறுவன வர்த்தக மற்றும் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் குறித்த உத்திகளில் புதுமைகளை புகுத்தியதுடன், அதனை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டியதற்காக இந்த விருது கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Commenting on why Infosys was chosen for this recognition, Robert L. Howie, Jr., president, Balanced Scorecard Collaborative, said, "Companies in the Asia Pacific, particularly India, are creating new benchmarks in becoming strategy-focussed organisations. Infosys is a particular example of a company that has adopted the BSC for over six years and, on the strength of its strategy-focussed approach, emerged as one of the leading names in the global IT industry."

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை செய்தி குறிப்பு:

Infosys Technologies Limited is a leading global provider of consulting and information technology services. Founded in 1981 and headquartered in India, Infosys is part of the NASDAQ-100 Index, with annual revenue of $3.09 billion in 2006-07. Infosys has over 80,000 employees in over 40 offices worldwide, servicing 500 Fortune 2000 clients around the globe.

According to CEO & Managing Director, Infosys, Mr. S. Gopalakrishnan, "Infosys' journey over the last 25 years has been very exciting. We have executed well on our strategies and have built a large-scale, global brand with a marquee list of clients, an enviable talent force, world-class infrastructure and a foundation for sustained differentiation and growth. This has been possible due to our clear focus on continuously creating higher value and balancing the needs of all our stakeholders.

Today our Strategy Map and BSC are key instruments for achieving strategic congruence across Infosys. Most importantly, the BSC has helped us create a common vocabulary for strategy execution across the company. As we move forward on our journey, we will continue to leverage and strengthen our BSC for superior alignment and business results."

~~~~~~~~

அமெரிக்க நிறுவனத்தை வாங்க உள்ளது நிர்மா

இந்திய நிறுவனமான நிர்மா, அமெரிக்காவின் சியர்லெஸ் வேளி மினரல்ஸ் (எஸ்விஎம்) நிறுவனத்தை 200 மில்லியன் டாலருக்கு வாங்க உள்ளது. நிர்மா நிறுவனத்தின் அமெரிக்க இணை நிறுவனம் சார்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் எஸ்விஎம் நிறுவனம், நிர்மாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த ஒப்பந்தம் தொடர்பான தகவல்களையும், நிர்மா சார்பில் எஸ்விஎம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தொகை குறித்த விவரங்களை நிர்மா நிறுவன அதிகாரிகள் வெளியிடவில்லை.

துணி துவைப்பதற்கு பயன்படும் சலவை உப்பு தயாரிப்பில் நிர்மா நிறுவனம் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் செயற்கை சலவை உப்பை இந்நிறுவன்ம் தயாரிக்கிறது. எஸ்விஎம் நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னர் ஆண்டு உற்பத்தி 2 மில்லியன் டன்னாக உயரும் என்பதால், உலகளவில் அதிக சலவை உப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் நிர்மா 7வது இடத்தை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

@@@

Thursday, November 29, 2007

இல்லத்தரசிகளுக்கு பஜாஜ் அலையன்ஸ் புதிய இன்சூரன்ஸ் திட்டம்

இல்லத்தரசிகளுக்கான புதிய இன்சூரன்ஸ் திட்டத்தை பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மிக எளிமையான விதிமுறைகளுடன் இல்லத்தரசிகளுக்கு ஆயுள் காப்பீடு அளிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், இல்லத்தரசிகள் எதிர் காலத்தில் தங்களையும், தங்களது எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம் என அந்நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த இன்சூரன்ஸ் திட்டம் இல்லத்தரசிகளுக்கு ஒரு சுய அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுப்பதோடு, அவர்களுக்கு பொருளாதார மதிப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, November 26, 2007

உலகின் சிறந்த பங்குச்சந்தை: இந்தியா முதலிடம்

உலகளவில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள பங்குச்சந்தை பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. கடந்த 3 மாத கால வளர்ச்சியின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பங்குச்சந்தை குறித்து ஆய்வு செய்து வரும் மார்கன் ஸ்டேன்லி கேபிடல் இண்டர்நேஷனல்- பார்ரா (MSCI Barra) வெளியிட்ட அறிக்கை இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 3 மாதத்தில் இந்திய பங்குச் சந்தை 33.64 % வளர்ச்சியை அடைந்து உள்ளதாகவும், இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு 400 பில்லியன் டாலர் லாபம் கிடைத்து உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதே கால கட்டத்தில் கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து நாட்டு பங்குச்சந்தைகள் சுமார் 28 சதவீத வளர்ச்சியையே எட்டியுள்ளன.

ஆனால் வளர்ந்த நாடுகள் பட்டியிலில் உள்ள அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரியா, ஸ்வீடன் மற்றும் பெல்ஜியம் நாட்டு பங்குச்சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தி உள்ளன. இங்கிலாந்து பங்குச்சந்தை மட்டும் 0.6% வளர்ச்சியை எட்டியுள்ளது.

இதே போல் லாபத்தை பொறுத்த வரை இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேசில் சந்தை 31% லாபத்தையும், சீன சந்தை 17 சதவீத லாபத்தையும் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: MSN தமிழ்

Tuesday, November 13, 2007

Rich Dad, Poor Dad - II

Rich Dad, Poor Dad - முதல் பகுதி

மூன்று வகையான வருமானம் உள்ளது.

1) Earned Income - பணத்திற்காக வேலை செய்வது!! மாச சம்பளக்காரர்கள். இவர்கள் முதல் வகை. Poor dadன் அறிவுரையே 'நல்ல வேலை கிடைப்பது'தான்.

2) Passive Income - பணம் நமக்காக வேலை செய்வது. ராயல்டி - நாம் எழுதின புத்தகம் அல்லது பாடல் மூலம் வரும் வருமானம். இன்னும் எளிமையா சொல்லணும்னா வீடு கட்டி வாடகையின் மூலம் வரும் வருமானமும் இந்த வகையைச் சார்ந்தது். இவர்கள் இரண்டாவது வகை.

3) Portfolio Income: பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், ஃபாண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம். நாம் ஓய்வெடுக்கும் போதும் நம் பணம் நமக்காக 'உழைப்பது்'. இது மூன்றாவது வகை.

Rich Dadன் அறிவுரையே... முதல் வகை (Earned Income) வருமானத்தை இரண்டாம் மற்றும் மூன்றாம் வகை வருமானமாக மாற்றுவதில்தான் இருக்கிறது.

Rich Dadன் சிதம்பர ரகசியம்....
"Know the difference between assets and liabilities"; "Buy Assets"

"Rich people acquire assets; The poor and middle class acquire liabilities, but they think they are assets."

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால்....

Asset -- Money in our pocket

Liabilities - Money out of our pocket.


~~~~~~~~~~~~~

வாழ்த்துக்கள்...!!

துறைச்சார்ந்த பதிவுகள்..... அதுவும் பங்கு வணிகம், பொருளாதாரம், அன்னிய செலவாணி... இப்படி பதிவுகள் வருவது மிகவும் அபூர்வம். அந்த வகையில் புதுசாக வந்த இந்த நண்பர்களுக்கு நமது வாழ்த்துக்களும்....நல்வரவும்...!!

1. மங்களூர் சிவாவின் think BIG

2. சாமான்யனின் பங்குவணிகம்

3. வங்கியிலிருந்து விருப்ப ஓய்வு எடுத்து தன்னுடைய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ள பானுமதி அம்மாவின் என் வீடு !

~

Thursday, November 1, 2007

மியூச்சுவல் ஃபண்டில் உண்மையான வருமானம் எவ்வளவு?

பெரும்பாலும் முதலீட்டின்போது, நுழைவுக் கட்டணம் சுமார் 2.50% செலுத்த வேண்டியிருக்கும். ஓராண்டுக்குள் அந்த முதலீட்டைத் திரும்ப எடுத்தால், வெளியேறும் கட்டணம் சுமார் 2 - 3% கொடுக்க வேண்டி இருக்கும். முதலீடு ஓராண்டுக்கு உட்பட்டதாக இருக்கும்பட்சத்தில் குறுகியகால மூலதன ஆதாய வரியாக 10% செலுத்தவேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் 40% ரிட்டர்ன் என்று சொல்லப்பட்ட முதலீட் டில் கையில் கிடைக்கும் உண்மையான வருமானம் சுமார் 25% ஆகிவிடும்.

அதே நேரத்தில், நுழைவுக் கட்டணம் இல்லாத திட்டம், ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீடு என்றால் உண்மை யான வருமானம் சுமார் 35%க்கு மேல் இருக்கும்.

ஒரு திட்டம் 40% வருமானம் சம்பாதித்து இருக்கிறது என்றால், அது முதலீட்டாளர் கைக்கு வரும் முன்பு, அதனை விட அதிகமாக வருமானம் ஈட்டி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், அதன் நிர்வாகச் செலவு மற்றும் லாபத்தை எடுத்துக் கொண்டு, அதனைக் கழித்துதான் என்.ஏ.வி. மதிப்பை வெளியிடு கிறது. இது திட்டத்தின் தன்மை மற்றும் நிறுவனத்தைப் பொறுத்து 0.25% தொடங்கி 3% வரை செல்கிறது. இதையும் சேர்த்தால் உண்மையான வருமானம் என்பது அதிகம்.

மேலும் டிவிடெண்ட் வருமானத்தைக் கணக்கிடு வதிலும் நம்மில் பலருக்குக் குழப்பம் ஏற்படுகிறது.

டிவிடெண்ட் ஆப்ஷனை எடுத்துக்கொண்டால், முக மதிப்புக்குத்தான் டிவிடெண்ட் வழங்கப்படுகிறது. டிவிடெண்ட் சதவிகிதத்துக்கும் என்.ஏ.விக்கும் தொடர்பு கிடையாது.

ஒருவர் என்.எப்.ஓவின் போது 10 ரூபாய் முக மதிப்பில் 10,000 ரூபாய் முதலீடு செய் கிறார் என்றால் அவருக்கு 1,000 யூனிட்கள் (நுழைவுக் கட்டணம் இல்லாத நிலையில்) ஒதுக்கப்படும். இதே திட்டத்தில் ஓராண்டு கழித்து மற்றொருவர், என்.ஏ.வி. 20 ரூபாய் விலையில் அதே 10,000 ரூபாயை முதலீடு செய்தால், அவருக்கு 500 யூனிட்கள்தான் கிடைக்கும். இந்நிலையில் 40% டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டால், என்.எஃப்.ஓவில் வாங்கியவருக்கு டிவிடெண்டாக 4,000 ரூபாய் கிடைக்கும். இடையே முதலீடு செய்த வருக்கு டிவிடெண்டாக 2,000 ரூபாய்தான் கிடைக்கும்.

இருவரின் முதலீட்டு தொகை ஒன்றாக இருந்தாலும், கையில் இருக்கும் யூனிட்டுக்கு ஏற்ப ரிட்டர்ன் கிடைத்துள்ளது.


நன்றி: நாணய விகடன்