Tuesday, February 26, 2008

வரி விலக்கு: பரஸ்பர நிதி முதலீட்டில்

பரஸ்பர நிதி முதலீட்டின் மூலம் வரி விலக்கு கிடைக்க சில வழிமுறைகள் இருக்கிறது. தெரிந்த விடயமாக இருந்தாலும், வரி கட்டும் நேரம் அல்லவா! அதனால் நம் நினைவுக்காக....

ஈ.எல்.எஸ்.எஸ் [E.L.S.S - Equity Linked Saving Schemes]: வரிச் சேமிப்பை அடிப்படையாகக் கொண்ட திட்டம்

வங்கிகளில் ஐந்தாண்டுகள் நிரந்தர முதலீடு செய்தாலும் வரிச்சலுகை கிடைக்கும்பொழுது இந்த திட்டத்தில் முதலீடு பண்ணவேண்டிய அவசியம் என்ன?

என்ன கொஞ்சம் ஆசைதான்!

வங்கிகளில் பண்ற முதலீடு 8 அல்லது 9 சதவீத வட்டி(தான்)! கடந்த வருடத்தில் ஈ.எல்.எஸ்.எஸ் திட்டங்கள் 25லிருந்து 30 சதவீதம் வருமானத்தை தந்துள்ளது. நல்ல வருமானம். அதற்கும்மேல் டிவிடெண்ட்!!





  • ஈ.எல்.எஸ்.எஸ் திட்டத்தில் செய்யும் முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது.

  • மற்ற பரஸ்பர நிதிகளில் இருப்பதைப்போல இந்த திட்டத்திலும் வளர்ச்சி (Growth) மற்றும் டிவிடெண்ட் (Divident option)என்று இரண்டு வகையுண்டு.

  • இதிலும் எஸ்.ஐ.பி (S.I.P) திட்டம் இருக்கிறது. மாதத்திற்கு 500 ரூபாயிலிருந்து தொடங்கலாம்.

  • ஆனாலென்ன மற்ற திட்டங்களைப்போல வளர்ச்சிக்கும், டிவிசெண்ட்க்கும் மாற முடியாது.

வைப்பு நிதி (PF) போல் கடைசி நேரத்தில் முதலீடு செய்யாமல், நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே முதலீட்டு செய்வது நல்லது. பங்குச்சந்தைகள் 'காளை'யாகும் பொழுது இந்த திட்டத்திலிருந்து சில வருமானங்களும் வர வழியுண்டு.

இது வரி விலக்கில் 80C கீழ் வரும்.

அதலாம் சரி... எந்த ஈ.எல்.எஸ்.எஸ் திட்டங்களில் முதலீடு செய்வது?

இதுக்கு பதில் சொல்றதுதான் கஷ்டம்! வழக்கம்போல் பரஸ்பர நிதி இணையதளத்தில் விவரங்களை தேடலாம். கடந்த காலகட்டத்தில் இதில் இருக்கும் திட்டங்களின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யலாம்.

அப்படி பார்த்த சில திட்டங்கள்:

1. HDFC Tax saver

2. Magnum Tax gain

3. Birla Sun Life Tax Relief '96

4. Sundaram BNP Paribas Taxsaver

இதில் சேரும் புதிய பரஸ்பர நிதி: SBI TAX Advantage Fund - Series I. மார்ச் 3, 2008ம் தேதியுடன் முடிவடைகிறது. 10 வருடம் காலவரையுள்ள திட்டம் (Closed Ended Fund Type). இப்பொழுதுதான் புதுசாக சந்தைக்கு வரப்போவதால் உள்ளே 'நுழைய' (entry load) கட்டணமில்லை. 'வரலாறு' இல்லாததால் இப்பொழுது இதை தவிர்ப்பது நல்லது.



2 comments:

said...

குறிப்பிட்ட காலத்திற்கு முதல் முடக்கப்படினும் அதில் உள்ளடங்கியுள்ள‌
வருவாய் வரிச் சலுகைதனை சொல்லியிருப்பது மட்டுமன்றி அந்தத் திட்டத்தின்கீழ்
இப்போது உள்ள சில ஹெச்.டி.எஃப்.சி.போன்ற வற்றினையும் குறிப்பிட்டிருக்கிறீகள்.

financial planning
குறித்த பதிவுகள் அவ்வளவாக தமிழில் இல்லை.
முதற்கண் அது குறித்த ஒரு பதிவு பார்க்கும்போது
மன நிறைவு ஏற்படுகிறது.

தொடர்ந்து எழுத எனது வேண்டுகோள்.
வாழ்க. வளர்க.

சுப்புரத்தினம்.
தஞ்சை.
http://arthamullaValaipathivugal.blogspot.com
http://vazhvuneri.blogspot.com
http://anewworldeveryday.blogspot.com

said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி, அய்யா!