Tuesday, July 31, 2007

35. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்ய....

சில நண்பர்கள் தனிமடல் மூலமாகவும் பதிவின் மறுமொழி மூலமாகவும் குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் நண்பர்கள் ..... இந்திய பங்கு சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது என்ற கேள்வி கேட்டிருந்தார்கள்.

ICICI வங்கியில் வேலை செய்யும் என் நண்பர் ஒருவரிடம் இதைப் பற்றி குறிப்பிட்ட பொழுது அவர் Regional Sales Manager for NRI servicesல் இருக்கும் நண்பரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் கூறியது...

'அமெரிக்கா/கனடாவில் வசிக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் NRE கணக்கின் மூலமாக இந்திய பங்குச்சந்தையில் நேரிடையாக முதலீடு செய்ய முடியாது. இப்பொழுது பல வங்கிகள் அமெரிக்கா டாலருக்கு நல்ல வட்டி தருகிறது. வேறொரு கணக்கை ஆரம்பித்து அந்த வாய்ப்பினை பயன் படுத்திக் கொள்ளலாம்.

மேலும் , இப்பொழுதைக்கு ULIP (Unit Linked Insurance Product) மூலமாகத்தான் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும்.'

UK, ஜெர்மனி போன்ற நாட்டில் வசிக்கும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எளிதானது என்ற எண்ணுகிறேன்.

UK, ஜெர்மனி போன்ற நாட்டில் வசிக்கும் இந்திய நண்பர்கள் இந்திய பங்குச்சந்தையில் நேரிடையாக முதலீடு செய்ய ஆர்வம் இருப்பின் ICICIல் பணிபுரியும் நண்பரின் தொலைபேசி எண் அல்லது அவரின் மின் அஞ்சல் முகவரி வேண்டுமெனில் nanayam2007@gmail.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள்.

சரி... ULIPனா என்ன? அது நல்லதா... ? இலாபமானதா...??

அதற்கும் மியூச்சுவல் திட்டத்துக்கும் என்ன வித்தியாசம்..... என்பதை எனக்கு தெரிந்ததை அடுத்த பதிவில் சொல்கிறேன்..

Tuesday, July 17, 2007

34. இந்திய பங்குச்சந்தை: 1,000லிருந்து 15,000க்கு..... மேலும்!

ஜீலை, 6, 2007 வெள்ளியன்று இந்திய பங்குச்சந்தை 15,000 புள்ளிகள் என்ற புதிய எல்லையை எட்டியுள்ளது.

ஜீலை 1990ல் முதன் முறையாக இந்திய பங்குச்சந்தை நான்கு இலக்கை (1001 !)க்கை எட்டியது.

இந்திய பங்குச்சந்தையின் பொற்காலமான 2003ம் ஆண்டில் 3 மாதங்களில் காளை பாய்ச்சலாக 3000 புள்ளிகலிருந்து 4000 பிடித்தது(67 வேலை நாட்களில்- trading sessions). அதை தொடர்ந்து அடுத்த மூன்று மாதங்களில் 5000 புள்ளிகளை தாண்டியது(இந்த முறை 54 வேலை நாட்களிலேயே!!).

2004ம் ஆண்டும் நல்ல ஆண்டாகவே ஆரம்பமானது, 6000 புள்ளிகளுடன்! அதற்கு தேவைப்பட்டது 43 வேலை நாட்கள் மட்டுமே!!.

ஆனால் 7,000 புள்ளிகளை தொட கொஞ்சம் சிரமப்பட்டது. 370 வேலை நாட்கள் அதாவது 2005ம் ஆண்டுதான மெதுவாக 7,000த்தை எட்டியது. பின்பு அதே ஆண்டில் 8000.... 9000 புள்ளிகள் என்று விறு விறுவென்று மேலே ஏறியது.

2006ம் ஆண்டில் ஐந்திலகத்தை 10,000 எட்டியது. ஆச்சரியபடக்கூடிய வகையில், 29 வேலை நாட்களில் 11,000 புள்ளிகளுக்கு சென்றது. மற்றது இதுவரை நாம் பார்த்து கொண்டிருப்பதுதான்....

இப்பொழுது சற்று விரிவாக...

ஜீலை, 1990: முதன் முதலில் இந்திய பங்குச்சந்தை 1000 புள்ளிகளை 'பிடித்தது'.

ஜனவரி, 1992: அப்பொழுதைய நிதித்துறை அமைச்சர் மன்மோகன்சிங்கின் 'பொருளதார கொள்கை'யினால் 2,000 புள்ளிகளை எட்டியது. (நன்றி: அன்றைய பிரதமர், திரு. நரசிம்ம ராவ்!)

பிப்ரவரி, 1992: எளிதாக 3000 புள்ளிகளை தாண்டியது. மன்மோகன்சிங்கின் 'market--friendly Budget' ஒரு காரணமாக இருக்கலாம்.

மார்ச், 1992: ஹர்சத் மேத்தா "வருகை"! 4,000 புள்ளிகளுக்கு கொண்டு சென்ற பெருமை அவருக்கே!! அதற்குபின் இந்திய பங்குச்சந்தைக்கு பிடித்தது சனி! 'சனி எத்தனையாவது இடத்தில்' போன்ற விவரங்களுக்கு சுப்பையா ஐயாவை தொடர்பு கொள்ளவும் ;)

அக்டோபர், 1999: முதன் முதலில் பா.ஜா.க மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆட்சி. தட்டு தடுமாறி 5,000 புள்ளிகளை பிடித்து கொஞ்சம் மூச்சு வாங்கியது!

பிப்ரவரி, 2000: இப்பொழுதுதான் தகவல் தொடர்புதுறை மாபெரும் வளர்ச்சி! 'கணிப்பொறி'னு சொன்னாலே '5 வருட அனுபவம்னு போட்டு' அமெரிக்காவில் வேலை மற்றும் இந்தியாவில் வளர்ச்சி... 6,000 புள்ளிகளை பிடித்தது.

ஜீன், 2005: IPCL, அம்பானி, RIL, Reliance Energy, Reliance Capital என்ற வார்த்தைகளை அதிகம் செய்திதாள்களில் இடம்பிடித்தது. விளைவு, பங்குச்சந்தை 7,000 புள்ளிகளை எட்டியது.

செப்டம்பர், 2005: 8,000 புள்ளிகள்!

நவம்பர், 2005: 9,000 புள்ளிகள். வெளிநாடுகளில் இருந்து முதலீட்டார்கள் படையெடுத்த கால கட்டம். சிறு முதலீட்டார்கள் அதிகம் கவனம் பெற்றது... இப்பொழுதுதான்!

பிப்ரவரி, 2006: 10,000 புள்ளிகள் பிடித்து சாதனை!

மார்ச், 2006: அடுத்த மாதத்திலேயே 11,000 புள்ளிகள் பிடித்து .... 'சந்திரமுகி'யை தாண்டிய 'சிவாஜி'யைபோல... ;) சாதனை!

ஏப்ரல், 2006: 12,000 புள்ளிகள் எட்டியது!

அக்டோபர், 2006: அதே ஆண்டில், 13,000 புள்ளிகளை பிடித்தது... (முரட்டுக்)காளை பாய்ச்சலில்!

டிசம்பர், 2006: 36(!) நாட்களில் 14,000 புள்ளிகள்!

ஜீலை, 6 2007: இரண்டு வாரங்களுக்கு முன்பு வெற்றிகரமாக 15,000 புள்ளிகளை பிடித்து இன்னும் மேலே செல்ல வாய்ப்புள்ளது!

இந்த ஆண்டு இறுதிக்குள் 17,500 புள்ளிகளை தொடும் என்ற 'கணிப்பு' உள்ளது!

உங்க கணிப்பு என்ன?

Friday, July 13, 2007

33. பிராங்களின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட்ல் சில மாற்றங்கள்

ஜீலை 16, 2007 தேதி முதல் பிராங்களின் டெம்பிள்டன் மியூச்சுவல் (Franklin Templeton Mutual) கீழ்கண்ட ஃபண்டுகளுக்கு எக்ஸிட் லோட் (Exit Load)ல் மாற்றம் கொண்டுவந்துள்ளது. கீழ்கண்ட ஃபண்டுகளில் 5 கோடிக்கு குறைவாக முதலீடு செய்திருந்து ஆறு மாதத்திற்குள் இந்த திட்டத்திலிருந்து பணம் எடுத்தால் 1 % ம் ஆறு மாத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் என்றால் 0.5% ம் எக்ஸிட் லோட் பிடித்துக்கொண்டுதான் கொடுப்பார்கள். என்ட்ரி லோட் (Entry Load)ல் மாற்றமில்லை.

1.Templeton India Growth
2.Franklin India Prima
3.Franklin India Flexi Cap
4.Franklin India Prima Plus
5.Franklin India Opportunities
6.Templeton India Equity Income

என்ன சொல்லவர்றாங்க.... "குறைந்தபட்சம் ஒரு வருடமாவது எங்க ஃபண்டுகளில் முதலீடு பண்ணிருக்கணும்' என்பதே! இதில் "சில ஃபண்டுகள்" நல்ல முதலீடாகும்.

~~~~~~~~

இன்றைய தேதிக்கு சிறந்த ELSS ஃபண்டுகள்:

1. Magnum Taxgain
2. HDFC Taxsaver
3.Birla Equity Plan
4. HDFC Long Term Advantage

The first two are large cap players while the other two invest predominantly in mid cap companies.

@

Wednesday, July 11, 2007

31. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சேவைகள்

பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நேரில் மட்டுமின்றி தொலைபேசி, இணையதளம் மூலமும் முதலீட்டாளர்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அதற்கு ஏற்ப யூனிட்களில் முதலீடு செய்யவும், அவற்றை விற்றுப் பணமாக்கவும் அனுமதிக்கின்றன.

பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கட்டணமில்லாத தொலைபேசி எண்களைக் (Toll -free numbers) கொண்டிருக்கின்றன. இந்த எண்களைத் தொடர்புகொண்டால், யூனிட்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சமீபத்திய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இன்னும் ஒரு படி மேலே சென்று, தொலைபேசி மூலம் யூனிட்களை விற்றுப் பணமாக்கும் வசதி மற்றும் ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்துக்கு மாறும் வசதி போன்றவற்றை தன் முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகிறது. இந்த வசதியை 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும், இந்தத் தொலைபேசி மூலமே முகவரி மாற்றம், கணக்கில் இருக்கும் தொகை பற்றிய விவரம் அறிதல், அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் (இ\மெயில் அல்லது ஃபேக்ஸ் மூலம் அனுப்பச் சொல்லுதல்) போன்ற வசதிகளையும் பெறலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள தனி அடையாள எண்கள் வழங்கப்-பட்டுள்ளன. ஒரு லோக்கல் கால் செலவில் இந்த வசதியைப் பெற-முடியும்.

யூ.டி.ஐ. நிறுவனம் வேறொரு ஏரியாவில் அசத்துகிறது. முதலீட்-டாளர் ஒருவர், யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றில் 10 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்... அவருடைய கோரிக்கையின் பேரில் முதலீடு 15 ஆயிரம் ரூபாயாகப் பெருகியதும், யூனிட்களை விற்றுப் பணத்தை அனுப்புகிறது.

இதேபோல், ‘என்.ஏ.வி. குறைந்து முதலீடு 9 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் போனால், அதிக நஷ்டப்படாமல் விற்றுப் பணத்தை அனுப்பி விடவும்’ என்று முதலீட்டாளர் சொன்னால் அதையும் செய்து கொடுக்கிறது!

ஹெச்.டி.எஃப்.சி., ரிலையன்ஸ் போன்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஏ.டி.எம். மூலம் யூனிட்களை விற்கவும் வாங்கவும் முதலீட்டாளர்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுடன் ஐக்கியமாகி இருக்கிறது. பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் ஃபைனான்ஸியல் போர்ட்டல்கள் (Financial Portals) ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும் வசதியை முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகின்றன.
யூனிட்கள் ஒதுக்கீடு, விற்பனை மற்றும் திட்டம் மாறிய விவரங்களை

ஐ.சி.ஐ.சி.ஐ.சி. புரூ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு கோரிக்கையின் பேரில் எஸ்.எம்.எஸ். தகவல் மூலம் அளிக்கிறது.

வழக்கமாக யூனிட்களை விற்ற நாளிலிருந்து மூன்று தினங்களுக்குப் பிறகுதான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அனுப்பும் காசோலை முதலீட்டாளருக்கு வந்து சேரும். இதனை, வங்கிக் கணக்கில் போட்டு பணம் வந்து சேர மேலும் சில நாட்கள் ஆகும். இந்தத் தாமதத்தைத் தவிர்க்கும் வகையில், சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனம்.
தன்னுடைய ஹை இன்ட்ரஸ்ட் ஃபண்ட் (High interest fund), சோவரின் கில்ட் ஃபண்ட் (Sovereign Gilt Fund) போன்ற திட்டங்களில், முதலீட்டின் மதிப்பில் 75% தொகையை எப்போது வேண்டு-மானாலும் பணமாக்கிக் கொள்ளும் வசதியை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. அதாவது, இந்தக் குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடு செய்யும்போதே, முதலீட்டுத் தொகைக்கான காசோலைகளை வழங்கி விடுகிறது. எப்போது பணம் தேவைப்பட்டாலும் முதலீட்டாளர் அந்த செக்கை வங்கியில் போட்டு பணமாக்கிக்கொள்ள முடியும். எடுக்கும் தொகைக்கு ஏற்ப யூனிட்களின் எண்ணிக்கை குறையும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு இதுபோன்ற கூடுதல் சேவைகளும் ஒரு காரணம் என்று சொல்ல-லாம். போகிற போக்கைப் பார்த்தால் பணம் கூட செலுத்த வேண்டியதில்லை என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது! கடைசி மந்திர வார்த்தை அதுவாகத்தானே இருக்க முடியும்!

நன்றி: நாணய விகடன்! (1-15 ஜீலை, 2007)

32. பங்கு பரிந்துரைகள் - ஜீலை 12, 2007

(1) பங்கின் பெயர்: GRACOM (Saregama)

சந்தை விலை; ரூ 324.05*

இலக்கு விலை: ரூ 405

எத்தனை மாதங்களில்: 12

* 'கிராமபோன்' என்ற பெயரை 'சரிகம' என்று 'புதுப்பித்துக்'கொண்டது.

* இந்தியாவின் மிகப்பெரிய இசை ஒலிப்பதிவு நிறுவனம். மூன்று இலட்சத்திற்கும் மேலான பாடல்கள் மற்றும் 47,000 copy rights.

* வீட்டு பொழுதுபோக்கு, டிஜிட்டல், திரைப்படங்கள் தயாரிப்பு என்று தன் வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது.

* போன வருடம் 150 ரூபாய் இருந்த 'சரிகம' பங்கு இப்பொழுது 324 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.

* இதன் போட்டியாளர்கள்: Zee Entertainment, Entertainment Network, UTV Software

(2) பங்கின் பெயர்: MERLIN (Mercator Lines)

சந்தை விலை; ரூ 51.90*

இலக்கு விலை: ரூ 58.20

எத்தனை மாதங்களில்: 3 - 6

பேப்பர் துறை:

* இதுவரை பின்தங்கி இருந்த இந்ததுறை, கடந்த ஆண்டுகளில் 15 - 17% வரை உயர்ந்துள்ளது. GDP வளர்ச்சி: 8 %

* இந்த துறையில் சீனா உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த துறையின் கவனிக்ககூடிய பங்குகள்:

(1) பங்கின் பெயர்: Ballarpur Industries (BALIN)

சந்தை விலை; ரூ 118*

இலக்கு விலை: ரூ 150

எத்தனை மாதங்களில்: 12 - 15

(2) பங்கின் பெயர்: Tamilnadu Newsprint (TAMNEW)

சந்தை விலை; ரூ 101.35*

இலக்கு விலை: ரூ 135

எத்தனை மாதங்களில்: 12

(3) பங்கின் பெயர்: West Coast Paper (WESCOA)

சந்தை விலை; ரூ 375*

இலக்கு விலை: ரூ 450

எத்தனை மாதங்களில்: 12

* ஜீலை 11, 2007 நிலவரப்படி. 'வழக்கம்போல' சொந்த முடிவின்படி முதலீடு செய்யவும்!!

Source: ICICI direct Research Company

Tuesday, July 10, 2007

ஐ போன் (I Phone)

ஐ-பாட் (I Pod) க்கு அப்புறம், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி, ஐ போன் (I Phone) . நாம் சிவாஜிக்கும், தசரவாதாரத்திற்கும் விடிய விடிய வரிசையில் நிற்பதைப்போல, ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் அமெரிக்கர்கள் இந்த ஐ-போன் வாங்குவதற்கு வரிசையில் நிற்பதை செய்திகளிலும்/நேரிலும் பார்த்து இருக்கலாம்.

இந்த வருட ஆஸ்கார் நிகழ்ச்சியின்போதுகூட 'ஹலோ (Hello)' என்ற வித்தியாசமான விளம்பரத்தின் மூலம் எல்லோரையும் 'அட' என்று ஆச்சியப்படுத்தியவர்கள்.

அப்படி என்னதான் இதில விசேசம்...?

விசைப்பலகை (Key board) கிடையாது. எல்லாமே டச் ஸ்கிரீன்தான்!! 2 மெகா பிக்சல் கேமிரா, ஒளி/ஒலி, Bluetooth னு ஏகப்பட்ட சாமாச்சாரங்கள் இருக்கு. இதன் அளவு 3.5 இஞ்ச் (8.9 செ.மீ), எடை 135 கிராம் (4.8 oz) தான். இணையதளம்/வலைப்பூ எல்லாம் 'மேயலாம்'.

'அட 3.5 இஞ்ச் தான.. இதில எந்தளவுக்கு பார்க்கமுடியும் நினைச்சிங்கனா... நீங்க கண்டிப்பா 'Demo' பாருங்க..

தற்சமயம் இரண்டு விதமான (4 GB & 8 GB) மெமரி சிப்பில் மட்டுமே வெளிவந்துள்ளது (ஐ-பாட்ல 30GB, 60GBக்கு இருக்கிறப்ப இதில அதிகமே 8GBதான்). 4 GBன் விலை $499 & 8 GBன் விலை $599 மட்டுமே! ஐ-டியூன் (I-Tunes) மூலமாகத்தான் இதை activate பண்ண முடியும்.

வெளிவந்த இரண்டே நாட்களில் 500,000 (அதாவது 160 மில்லியன் டாலர்) ஐ போன்கள் விற்று சாதனை படைத்துள்ளது. இதில் 8GB உள்ள ஐ-போன் வாங்கியவர்கள்தான் அதிகமாம். இன்றைய தேதிக்கு 200,000 விற்றிடுக்கும் என்று நம்பலாம்.

ஒரு 8GB ஐ-போன் விற்றால், ஆப்பிள் நிறுவனத்திற்கு 333 டாலர் கிடைக்குமாம்.

கை தொலைபேசி (Mobile Phone) சந்தையில் ஒரு சதவீதத்தை 'கைப்பற்றுவது'தான் அவர்களின் குறிக்கோளாம். அதாவது ஒரு வருடத்தில் 10 மில்லியன் ஐ-போன்கள் விற்க வேண்டும். அமெரிக்க சந்தையில், MP3 பிளேயர்களில் 63% பேர் ஐ-பாட் பயன்படுத்துகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

இப்போதைக்கு ஏடி&டி (AT&T ) நிறுவனத்துடன் மட்டும் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இதனால் AT&T க்கு வருடத்திற்கு 2-3 பில்லியன் டாலர்கள் வருவாய் கிடைக்கும். இந்த வருட(2007) இறுதியில் கனடா மற்றும் Vodafone மூலமாக ஐரோப்பாவிலும் அடுத்த வருடம் மெக்சிகோ, ஆஸ்திரேலியா மற்றும் Airtel மூலமாக இந்தியாவிற்கும் வர இருக்கிறதாம். (நம்ம ஊருல விலை என்னவாம் இருக்கும்....?!)

10-12 வருடங்களுக்கு முன்னால் மைக்கேல் கோவச் (Michael Kovatch) என்பவர் தன் சொந்த தேவைக்கு iphone.com என்ற இணையதளத்தை பதிவுசெய்ய, அவரிடம் இருந்து, ஆப்பிள் நிறுவனம் 1 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியுள்ளார்கள்.

Monday, July 2, 2007

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்: திட்ட மேலாளர், கஸ்டடியன் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ்

பத்து ரூபாய்னாலும் சரி பத்தாயிரம் ரூபாய்னாலும் சரி - திட்டமிட்டு செலவு செய்தால் சேமிக்க வழியுண்டு.

என் அப்பாவுக்கு இப்பொழுதும் தினமும் வரவு-செலவு எழுதும் பழக்கம் உண்டு. நான் ஆச்சரியப்பட்ட பல விசயங்களில் இதுவும் ஒன்று. இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது ..... தூர்தர்ஷன் (ஆங்கில) செய்திகள் முடிந்தவுடன் அம்மா அப்பாவுக்கு வரவு-செலவு கணக்கு கொடுக்க வேண்டும். எங்களுக்கு நினைவில் இருப்பதை அம்மாவுக்கு சொல்வோம்....... (மளிகை சாமான் கணக்கு, ஊருக்கு போனால் ஆகும் செலவு என்று...) இப்படி அம்மாவை அப்பாவிடமிருந்து பல முறை 'காப்பாற்றி' இருக்கிறோம்!!.

10 காசு tally ஆகும்வரை கணக்கு துல்லியமாக இருக்க வேண்டும் அப்பாவுக்கு. இன்னும் அதே துல்லியம்தான்...!

சரி ... இப்ப எதுக்கு சொந்த கதை அப்படிகிறீங்களா.....?!

நாம் முதலீடு செய்யும்........[பல கோடிகள் புரளும்] மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் நிர்வாகத்தை பற்றி தெரிந்து கொண்டால் நல்லதுதானே?!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் பல குழுக்கள் உள்ளது. அப்புறம்....பல கோடிகளை வைத்து நிர்வாகம் பண்றதுகிறது அவ்வளவு எளிதானதா என்ன?

1. ட்ரஸ்ட் (Trust)
2. ஏ.எம்.சி. (AMC - Asset MAnagement Company)
3. திட்ட மேலாளர் அல்லது சி.ஐ.ஓ (CIO - Chief Investment Officer)
4. கஸ்டடியன் (Custodian)
5. ரெஜிஸ்டிரார் அண்ட் ட்ரான்ஸ்ஃபர் ஏஜென்ட் (Register and Transfer Agent)
6. டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் (Distributers)

1. ட்ரஸ்ட் (Trust):


நாம் முதலீடு செய்யும் அல்லது திட்டங்களின் கீழ் திரட்டப்படும் பணம் மற்றும் அதன் சொத்துக்கள் அனைத்தும் இந்த ட்ரஸ்ட் பொறுப்பில் வரும். இதில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சாராத வெளி ஆட்கள்தான் இருக்க வேண்டும். நம் சார்பாக.... திட்டத்தில் வரும் நிதி நிர்வாகத்தில் ஏதும் பிரச்சனை இல்லாமல் கொண்டு செல்வது இவர்களின் பொறுப்பு.

2. ஏ.எம்.சி. (AMC அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி) :


தினமும் புது புது பெயரில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப் படுத்துதல், திட்டமிட்டபடி பங்குகள் அல்லது கடன் பத்திரங்களில் முதலீடு செய்தல் போன்ற தினசரி வேலைகளை பார்த்துக் கொள்ளவது இவர்களுடைய கடமை.

செபி (SEBI) யின் வலியுறுத்தலின் பேரில், ஏ.எம்.சி-யின் (நிகர) சொத்து மதிப்பு 10 கோடி ரூபாய்க்குமேல் இருக்கவேண்டும். இதில் இருப்பவர்கள் மிகவும் திறமையான, நேர்மையானவர்களாக இருப்பார்கள். சும்மா... மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 'அவர்கள்' ஆளை தேர்ந்தெடுக்க முடியாது. இந்த அமைப்பும் செபியின் அனுமதி பெறவேண்டும்.

3. திட்ட மேலாளர் அல்லது சி.ஐ.ஓ (CIO - Chief Investment Officer) :

ஏ.எம்.சி அமைப்பால் தேர்ந்தெடுக்கப்படும் இவர் திட்டத்தின் முதலீடு, செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். இவரின் நிர்வாக திறமையை பொறுத்தே 'நம் பங்கலகின்' மதிப்பு கூடும்.. குறையும்...

4. கஸ்டடியன் (Custodian) :

திட்டங்களிலிருந்து திரட்டப்பட்ட நிதி, அதைக்கொண்டு வாங்கப்பட்ட பங்குப் பத்திரங்கள், கடன் பத்திரங்கள் எல்லாம் இவர் பொறுப்பில்தான் இருக்கும். திட்ட மேலாளர் சொல்வதை 'அப்படியே' செய்ய வேண்டும்.. கேள்விகள் ஏதும் கேட்காமல்...

5. ரெஜிஸ்டிரார் அண்ட் ட்ரான்ஸ்ஃபர் ஏஜென்ட் (Register and Transfer Agent):

நமக்கு வரும் காலாண்டு/முழு ஆண்டு அறிக்கைகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடு சம்பந்தமான தகவல்கள் போன்றவற்றை நமக்கு அனுப்புவது இவர்களின் பொறுப்பு.

6.டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் (Distributers) :

Film Distributers மாதிரிதான்... ஆனால் அதைவிட 'பொறுப்பு' அதிகம்.

பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் திட்டங்களை நமக்கு [முதலீட்டாளர்களுக்கு] சொல்வது....பின் அந்த திட்டத்தில் முதலீடு செய்ய உதவுவது இவர்களின் தலையாய வேலை.

இதில் பலவற்றுக்கும் செபியின் வரைமுறை உள்ளது. அந்த நிபந்தனையின் பேரிலேயே தேர்தெடுக்க படவேண்டும்.