- மண் பரிசோதனை மையங்களுக்கு 75 கோடி ரூபாய்.
- தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய். [சிரிக்காதீங்க... அமைச்சர் சீரியசாதான் சொன்னாரு...!]
- பொது விநியோக திட்டத்துக்காக ரூ 32,676 கோடி மானியம்.
- தேசிய தோட்டக்கலை அமைப்புக்கு 1100 கோடி ரூபாய்.
- தேயிலை ஆராய்ச்சி அமைப்புக்கு சிறப்பு ஒதுக்கீடாக 20 கோடி ரூபாய்.
- தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்திற்கு 12,966 கோடி ரூபாய். [நீங்க பண்ற வளர்ச்சி திட்டங்களின் விவரங்களை அறிவிப்பு பலகையாக வைத்தால் அந்தப் பக்கம் போற வர்ற எங்களுக்கும் புரியுமில்லை.... எதுக்கெதுக்கோ தோரணங்களாம் வைக்கிறீங்க. ஒரு திட்ட வளர்ச்சியை பத்தி ஒரு அறிவிப்பு பலகை வைக்கமாட்டீங்களா?]
- குழந்தைகள் மேம்பாட்டுக்காக அரசு இந்த ஆண்டு 24 சதவீதம் உயர்த்துகிறது. [ஓ... அப்பனா போன வருடமும் இதுமாதிரி ஒரு திட்டம் இருந்ததா?]
- பள்ளிகளில் குடிநீர் வசதியை ஏற்படுத்த ரூ 200 கோடி.
- துப்புரவு திட்டங்களுக்கு ரூ. 1200 கோடி.
- தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ 75 கோடி.
- தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ 9 கோடி.
- சென்னை அருகே கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை நிறுவ ரூ 300 கோடி.
- கல்வி நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் மதிய உணவு திட்டத்திற்கு ரூ. 8,000 கோடி.
- பாரத் நிர்மாண் திட்டத்துக்காக ரூ 31,280.
- நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் மொத்தம் 1,05,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம்.
2007-2008 ஆண்டில் நிறைவேறிய/நிறைவேற போகும் திட்டங்கள் இங்கே!!
ஒண்ணும் புரியலைப்பா... நிதி அமைச்சர்கிட்ட நேரா கேள்விகேட்டாதான் புரியும் நினைக்கிறவங்க இங்க போய் முயற்சி செய்து பார்க்கலாம்.